பஞ்சாபில் லவ்லி புரொபஷனல் என்ற பல்கலைக்கழகத்தில் மாணவ போராட்டங்கள் வெடித்துள்ளது. லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் கடந்த 10 நாட்களில் 2 தற்கொலைகள் நடந்துள்ளன. இதைத்தொடர்ந்து அங்கு மாணவ போராட்டங்கள் நிகழ்ந்ததை தொடர்ந்து காவல்துறையினர் போராட்டக்காரர்களை தற்போது கட்டுப்படுத்தி உள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த 21 வயதான அக்னி எஸ் திலீப், டிசைனிங் பட்டப்படிப்பு படித்துவந்தார். திடீரென்று ‘’ தனிப்பட்ட பிரச்னைகளை’’ தொடர்வதால் தற்கொலை செய்து கொள்வதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்த அதிர்வலைகள் அடங்குவதற்குள் அடுத்த தற்கொலை நடந்துள்ளது.
இந்த முறையும் அதே டிசைனிங் பட்டப்படிப்பைச் சேர்ந்த மாணவரின் தற்கொலை நிகழ்ந்துள்ளது. மேலும், இவரின் தற்கொலைக்குத் தனிப்பட்ட பிரச்னைகள் தான் காரணம் என்று காவல்துறை தரப்பு கூறுவதை மாணவர்கள் ஏற்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
10 நாட்களில், ஒரே பிரிவில் இரண்டு மாணவர்கள் தற்கொலை நடந்துள்ளது எனில் அது எப்படி தனிப்பட்ட காரணங்களாக இருக்கும்? முதல் தற்கொலை நடந்த போது அதை மூடி மறைக்க முயன்றார்கள். அதனால் இப்போது சொல்வதை எப்படி நம்புவது எனப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் தரப்பில் விசாரணைக்கு முறையா ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். முதல் கட்ட ஆய்வில் இந்த மாணவரும் தற்கொலை தான் செய்துகொண்டார் என்பதுக்கான குறிப்புகள் கிடைத்துள்ளது. மேற்கட்ட விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM