வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கீவ்: ரஷ்ய ஆதரவு பெற்றுள்ள பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் நான்கு பிராந்தியங்கள், அந்நாட்டுடன் இணைய உள்ளன. இதற்காக மக்களிடம் கருத்து கேட்கும் ஓட்டெடுப்பு விரைவில் துவங்க உள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த, பிப்., 25ல் போர் தொடுத்தது. ஏழு மாதங்களை கடந்து போர் நீடித்து வருகிறது. ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், போரை தீவிரப்படுத்தும் வகையில், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள நான்கு பிராந்தியங்களை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ரஷ்யா திட்டமிட்டுள்ளது. டோனெட்ஸ்க், லுஹான்க்ஸ், கெர்சான் மற்றும் ஜபோரிஸ்சியா ஆகிய இந்த நான்கு பிராந்தியங்களை, தன்னுடன் இணைக்க ரஷ்யா திட்டமிட்டு உள்ளது.
இதற்காக இந்தப் பிராந்தியங்களில் மக்களின் கருத்துகளை கேட்கும் ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், 23ல் ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.பிரிவினைவாதிகள் ஆதரவு உள்ளதால், இந்த ஓட்டெடுப்பு ரஷ்யாவுக்கு சாதகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த இணைப்பை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கீகரிக்குமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement