பாக்கெட் பாலுக்குள் ஈ? பால் குடிக்க கவருக்குள் புகுந்ததா? ஆவினை கலாய்க்கும் வீடியோ

மதுரை: ஆவின் பால்பாக்கெட்டில்  ஈ  இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்வலைகளை கிளப்பி உள்ளது. மதுரையில் வாங்கிய ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்துள்ளது. அதைப் பார்த்த நுகர்வோர், அதை வீடியோ வெளியிட்டதை அடுத்து, விஷயம் வைரலாக பரவியது. நுகர்வோர் அதிர்ச்சி அடைந்து, இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். பாக்கெட் பாலுக்குள் ஈ இருந்ததால் அதிர்ச்சியாகும் மக்கள், ஆவினின் மெத்தனப் போக்கைக் கண்டிக்கின்றனர். பால் குடிக்க கவருக்குள் ஈ புகுந்ததா? கேள்வி கேட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள், வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். 

மதுரை ஆவின் சார்பில், கவ், கோல்டு, எஸ்.எம்.,  நிலைப்படுத்தப்பட்ட பால், டீ மேட் உட்பட ஐந்து வகை பால் பாக்கெட்டுகள் நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சத்திற்கும் மேல் தயாரிக்கப் படுகின்றன. இவை, 40க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெப்போக்களுக்கு வினியோகம் செய்யப்படுகின்றன.

அதில், ஆரப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட, 33வது வழித்தடத்தில் பால் வேன் மூலம் நாகமலை புதுக்கோட்டை, மதுரை காமராஜ் பல்கலை, கீழமாத்துார் உள்ளிட்ட டெப்போக்களில் பால் பாக்கெட்டுகள் வினியோகிக்கப்பட்டன. மதுரை காமராஜர் பல்கலைகழகத்திற்க்கு அருகே உள்ள டெப்போவில் அரை லிட்டர் எஸ்.எம்., பச்சை நிற பாக்கெட் வாங்கிய பெண் நுகர்வோர், பாக்கெட்டிற்குள், ‘ஈ’ இறந்து மிதந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடன் டெப்போவில் திருப்பி ஒப்படைத்தார்.  இத்தகவல் அறிந்து டெப்போவிற்கு சென்ற ஆவின் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தற்போது அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இது குறித்து விளக்கமளித்த ஆவின் நிர்வாகம் பேக்கிங் செய்யும் தவறு நடந்திருக்கலாம் எனவும் பணியில் அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.