வேலூர் அருகேயுள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 14 வயதாகும் பள்ளி மாணவிக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. மாணவியை அவரின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்திருக்கிறார்கள். அப்போது, மாணவி கர்ப்பமடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கவே, பெற்றோர் அதிர்ந்துபோயினர். பாலியல் விவகாரம் என்பதால், மருத்துவர்கள் உடனடியாக காவல்துறையினருக்குத் தெரியப்படுத்தினர். வேலூர் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தியபோது, சிறுமிக்கு ஏற்பட்ட அந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது. சிறுமிக்கு 21 வயதில் ஜெபஸ்டீன் என்ற ஒரு அண்ணன் உள்ளான். உணவு டெலிவரி வேலைச் செய்கிறார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் வெளியில் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த தங்கையை மிரட்டி அத்துமீறியிருக்கிறான். இதுபற்றி வெளியே சொன்னால், கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறான் அந்தக் கொடூர அண்ணன். சிறுமியும் தனக்கு நேர்ந்த கொடூரத்தை பெற்றோரிடம் தெரிவிக்காமல் மறைத்திருக்கிறார். இதை சாதகமாக நினைத்துக்கொண்ட அந்தக் கொடூர அண்ணன், தொடர்ந்து படுபாதகச் செயலில் ஈடுபட்டிருப்பது, விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ‘போக்ஸோ’ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார்,ஜெபஸ்டீனை கைது செய்து, சிறையிலடைத்திருக்கிறார்கள்.