பொன்னியின் செல்வனில் வைரமுத்துவுக்கு கல்தா – ஏ.ஆர்.ரஹ்மான்தான் காரணம்?

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக உருவாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கிறது. இதன் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸாகிறது. படத்தின் ட்ரெய்லரும், பாடல்களும் வரவேற்பைப் பெற்றுள்ளன. படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சில நாள்களே இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்துள்ளன.

இதற்கிடையே கோலிவுட்டின் ஹிட் கூட்டணியான வைரமுத்து – ஏ.ஆர்.ரஹ்மான் – மணிரத்னம் இந்த படத்தில் மிஸ் ஆனது. வைரமுத்துவுக்கு பதிலாக இளங்கோ கிருஷ்ணன் பாடல்களை எழுதியிருக்கிறார். ஆனால், பொன்னியின் செல்வன் போன்ற படத்துக்கு வைரமுத்துவைத்தான் பாடல்கள் எழுத வைத்திருக்க வேண்டுமென பலர் வெளிப்படையாகவே கருத்து கூறினர். இதுகுறித்து மணிரத்னம் எந்த விளக்கத்தையும் கொடுக்காமல் மௌனம் காத்துவந்தார்.

இந்தச் சூழலில் நேற்று பொன்னியின் செல்வன் ப்ரோமோஷனில் கலந்துகொண்ட மணிரத்னத்திடம் வைரமுத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தமிழ் மொழி பல நூற்றாண்டுகளாக இருக்கிறது. அதனுனடைய சொல் வளமை என்பது அபரீதமானது. பல கலைஞர்கள், இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோரை இத்தனை நூற்றாண்டுகளாக தமிழ் பார்த்துவிட்டது. 

வைரமுத்துவும் மிகவும் சிறப்பானவர். அவருடன் இணைந்து பல படங்கள் ஒன்றாக பணியாற்றி இருக்கிறோம். அவரின் பல கவிதைகளுக்கு இசை வடிவம்கொடுத்துள்ளோம். இருப்பினும் அவரை விட மிகச் சிறந்த கலைஞர்கள் தமிழில் இருக்கின்றனர். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாகவும், புதியவர்களோடு பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலும் பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியிருக்கிறோம்” என கூறினார்.

ஆனால் மணிரத்னம் வைரமுத்து விவகாரத்தில் மழுப்பலான பதிலையே கொடுத்திருக்கிறார் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். அதுமட்டுமின்றி, வைரமுத்து மீது Mee Tooவில் சின்மயி குற்றஞ்சாட்டியது கோலிவுட்டையே பரபரப்பாக்கியது. 

 

இப்படியான நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வைரமுத்துவை பயன்படுத்தினால் தேவையில்லாத சிக்கல் எழும் என எண்ணிய ரஹ்மான் வைரமுத்துவை இந்தப் படத்தில் பயன்படுத்த விரும்பவில்லையாம். அதேபோல், மணிரத்னத்தின் மனைவியான சுஹாசினியும் வைரமுத்துவை பொன்னியின் செல்வனில் எழுத வைக்க வேண்டாமென்று மணிரத்னத்திற்கு அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Suhasini

அதேசமயம், வெந்து தணிந்தது காடு படத்தின் தெலுங்கு வெர்ஷனில் சின்மயி ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் பாடியிருப்பதன் மூலம் ரஹ்மான் வைரமுத்துவை முற்றிலும் ஒதுக்கி வைத்துவிட்டார் என்றே கருதப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.