லடாக் மோதல்.. எல்லையில் முக்கிய ரோந்து பகுதிகளை சீனாவிடம் இழந்த இந்தியா? பரபரப்பு குற்றச்சாட்டு

லடாக்: லடாக் எல்லையில் இந்திய படைகள் பல இடங்களில் துருப்புகளை வாபஸ் வாங்குவதால் புதிய பஃபர் சோன்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக எல்லையில் இந்தியா குறிப்பிடத்தகுந்த அளவில் நிலங்களை இழந்துவிட்டதாக உள்ளூர் மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

2020ல் லடாக் எல்லையில் இந்திய சீன படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்றது. இந்த மோதலை தொடர்ந்து கோர்கா – ஷாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது.

எப்போது வேண்டுமானாலும் மோதல் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவி வந்தது. மேற்கொண்டு மோதலை தவிர்க்கும் விதமாக இரண்டு தரப்பில் இருந்தும் பல்வேறு மட்ட அளவில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

ராணுவத்தின் பல்வேறு மட்ட அளவில் அதிகாரிகள் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தைகள் பல மாதங்களாக நீடித்த நிலையில் பாங்காங் டிசோ ஏரி பகுதியில் இருந்து இரண்டு தரப்பும் படைகளை வாபஸ் வாங்கி முந்தைய கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு சென்றன.

படைகள் வாபஸ்

ஆனால் கோர்கா – ஷாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. இந்த நிலையில்தான் கடந்த மாதம் இங்கிருந்து இரண்டு படைகளும் வாபஸ் வாங்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இரண்டு நாட்டு படைகளும் இதற்கு ஏற்றுக்கொண்டன. ஆனால் அதே சமயம் அங்கே புதிய பஃபர் சோன்களை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. பஃபர் சோன் என்றால் வீரர்கள் இல்லாத பகுதி அல்லது ரோந்து மேற்கொள்ளப்படாத பகுதி. இங்கே இரண்டு நாட்டு ராணுவமும் ரோந்து மேற்கொள்ளாது.

ரோந்து பகுதிகள்

ரோந்து பகுதிகள்

இந்த புதிய பகுதிகள் தற்போது உருவாக்கப்பட்டு உள்ளன. ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால் இந்தியா ஏற்கனவே ரோந்து மேற்கொண்ட பகுதிகள் சில தற்போது பஃபர் சோன் பகுதிகளாக மாற்றப்பட்டு உள்ளன. அதாவது இங்கு இந்திய ராணுவம் இனி ரோந்து மேற்கொள்ளாது. இதுதான் லடாக்கில் வாழும் இந்தியர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய ராணுவம் ஒவ்வொருமுறையும் பேச்சுவார்த்தை மூலம் படைகளை வாங்கும் போதெல்லாம் குறிப்பிட்ட அளவு நிலத்தை இழக்கிறது. ஒன்று சீன ராணுவம் அந்த இடத்தை பிடிக்கிறது அல்லது அவை ரோந்து மேற்கொள்ளப்படாத பஃபர் சோன்களாக மாற்றப்படுகின்றன என்று புகார் வைக்கப்பட்டு உள்ளது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு பிறகு குக்கிராங் மலை பகுதியில் உள்ள ரோந்து பகுதிகள் 15, 16, 17 ஆகிய பகுதிகளில் இருந்து இந்திய ராணுவம் வெளியேறியது. இந்த பகுதிகள் இந்திய ராணுவம் ரோந்து மேற்கொண்ட பகுதிகள் ஆகும். இவை தற்போது பஃபர் சோன்களாக மாற்றப்பட்டுள்ளன. இதன் அர்த்தம் இங்கு இந்திய ராணுவ இனி ரோந்து பணிகளை செய்யாது என்பதாகும். லடாக்கில் உள்ள இந்தியர்கள் இடையே இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பஃபர் சோன்

பஃபர் சோன்

அங்கு இருக்கும் போப்ராங் என்ற கிராமத்தை சேர்ந்த உள்ளூர் தலைவர் கோஞ்சாக் ஸ்டாப்கிஸ் இது தொடர்பாக தி இந்து ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ரோந்து பகுதி 17ல் இருந்து 60 கிமீ தூரத்தில் எங்கள் கிராமம் உள்ளது. சமீபத்தில் அணி லா என்ற பகுதியில் இருந்தும், தொடங் மலை பகுதியில் இருந்தும் இந்திய ராணுவம் பல இடங்களில் வெளியேறியது. பேச்சுவார்த்தைக்கு பின்பாக இங்கு இருக்கும் பல ரோந்து புள்ளிகளில் இருந்து இந்திய ராணுவம் வெளியேறியது. இந்த இடங்களை ஒன்று சீனா அதன்பின் ஆக்கிரமித்து விடுகிறது அல்லது அந்த இடங்கள் பஃபர் சோன்களாக மாற்றப்பட்டு விடுகின்றன என்று குற்றச்சாட்டு உள்ளார்.

குக்கிராங் மலை

குக்கிராங் மலை

கிட்டத்தட்ட குக்கிராங் மலையில் மட்டும் 41 கிமீ தூரத்திற்கு உள்ள இடத்தை இந்தியா இழந்து விட்டது. இந்த இடங்கள் நமக்கு சொந்தமானது என்பதை காட்ட ஆவணங்கள் இல்லை. இருந்தாலும் இங்குதான் நாம் இத்தனை கால ரோந்து பணிகளை செய்து வந்தோம். அங்கு நமது முன்னோர்கள் வசித்து வந்தனர். தற்போது அந்த இடங்களை நாம் இழந்து நிற்கிறோம், என்று அவர் தெரிவித்து உள்ளார். இவரின் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை இந்திய ராணுவம் பதில் அளிக்கவில்லை.

ராணுவம் விளக்கம் இல்லை

ராணுவம் விளக்கம் இல்லை

பஃபர் சோன் உருவாக்கப்பட்டதும் இரண்டு நாட்டு ராணுவமும் அங்கிருந்து வெளியேற வேண்டும். இப்படித்தான் இந்தியா தனக்கான இடங்களை இழப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் பஃபர் சோன் உருவாக்கப்படுவதற்கு பதிலாக சீனாவே அந்த இடங்களை ஆக்கிரமிக்கிறது என்றும் புகார் வைக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக மக்கள் பயன்படுத்தாத ஆடு மேய்க்கும் நிலங்கள் போன்றவற்றை தான் இப்படி பஃபர் சோன் பகுதிகளாக மாற்றுகிறார்கள் அல்லது இவற்றைத்தான் சீனா கைப்பற்றி வருகிறதாம் .

 நம்முடைய நிலம்

நம்முடைய நிலம்

ஆனால் இந்த நிலம் மக்கள் பயன்படுத்தாத நிலம் என்றாலும், அது நமக்கு சொந்தமான நிலம். அதை எப்படி பஃபர் சோன் பகுதியாக மாற்றலாம் என்று மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். 2011ல் இருந்தே இதை நிலைதான். ஆனால் கடந்த 2 வருடங்களில் இப்படி நிலங்களை இழப்பது அதிகம் ஆகி உள்ளது என்று உள்ளூர் மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். நாம் பேச்சுவார்த்தைக்கு பின் நிலங்களை மீட்பதற்கு பதிலாக இழக்க தொடங்கி விட்டோம் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

சொந்தமான நிலம்

சொந்தமான நிலம்

2020க்கு பின்பாக இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. ரோந்து புள்ளிகள் PPs 9, 10, 11, 12, 12A, 13, 14, 15, 17, 17A. ஆகிய இடங்களில் இந்திய ராணுவம் முன்பு ரோந்து செய்து வந்தது. ஆனால் லடாக்கில் உள்ள இந்த பகுதிகளில் தற்போது நாம் ரோந்து செய்ய முடியாது. காரணம் இவை பிளாக் செய்யப்பட்டு உள்ளது. இதில் பல இடங்களில் ரோந்து மேற்கொள்ளப்படாத பஃபர் சோன் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள்.. எங்கே.. அடுத்த மக்கள் வாழும் நிலங்களையும் இழந்து விடுவோமோ என்று அஞ்ச தொடங்கி உள்ளனர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.