பாஞ்சாகுளம் தீண்டாமை வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் 6 மாதம் ஊருக்குள் நுழைய தடை!

தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் தீண்டாமை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் அடுத்த ஆறு மாதத்திற்கு கிராமத்திற்குள் நுழைய நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த பாஞ்சாங்குளத்தில் பள்ளிச் சிறுவர்களிடம் சாதி தீண்டாமையை வெளிப்படுத்திய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் அங்கு கடை நடத்தி வரும் நிலையில் அந்த கடையில் திண்பண்டம் வாங்க சென்ற சிறுவர்களுக்கு ஊர் கட்டுப்பாடு விதித்து திண்பண்டம் கொடுக்க முடியாது என்று சிறுவர்களிடம் ஜாதி தீண்டாமையை வெளிப்படுத்தியிருந்தனர்.
BREAKING பாஞ்சாகுளம் தீண்டாமை குற்றவாளிகள் 6 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை!!
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து ரமாச்சந்திர மூர்த்தி, குமார் மகேஷ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர் . மேலும் முருகன், சுதா ஆகிய இருவரை தேடி வரும் நிலையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த குற்றத்தில் தொடர்புடைய 5 பேரும் ஊருக்குள் நுழைய தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்திருந்தார்.
பள்ளி சிறுவர்களுக்கு தீண்டாமை கொடுமை நடந்த கடைக்கு சீல்! - உரிமையாளர்  உள்ளிட்ட இருவர் கைது| two were arrested for caste discrimination to school  students
இந்த நிலையில், தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி பத்பநாபன் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கு 6 மாதம் ஊருக்குள் நுழைய தடை விதித்து உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழகத்தில்வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊருக்குள் நுழைய தடை விதிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.