“எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நாளை (22-ம் தேதி) முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்” என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2022 – 2023-ம் ஆண்டுக்கான மருத்துவம் (எம்.பி.பி.எஸ்) மற்றும் பல் மருத்துவ (பி.டி.எஸ்) படிப்புக்கான விண்ணப்ப பதிவு நாளை (செப்.22-ம் தேதி) முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது.
விண்ணப்பதாரர்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் சென்று விண்ணப்பிக்கலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.