\"முத்தம் கொடுக்க போன ரோஹித்.. பதறி ஓடிய டிகே\".. எல்லை மீறி போறீங்கடா.. டிரெண்டாகும் மீம்ஸ்!

மொஹாலி: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நேற்று இந்திய அணி தோல்வி அடைந்ததை வைத்து நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

நேற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. நேற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மிகவும் சிறப்பாகவே ஆடியது. தொடக்கத்தில் இருந்தே அதிக இலக்கை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அதிரடியாக ஆடி 208-6 ரன்கள் எடுத்தது.

பாண்டியா வெறும் 30 பந்தில் 5 சிக்ஸ், 7 பவுண்டரி என்று 71 ரன்கள் எடுத்தார். இதன் பின் இறங்கிய ஆஸ்திரேலிய அணி கேமரூன் கிரீன், மேத்யூ வேட் அதிரடியால் 19.2 ஓவரிலேயே 211-6 ரன்கள் எடுத்தது. கேமரூன் கிரீன் 30 பந்தில் 61, மேத்யூ வேட் 21 பந்தில் 45 ரன்கள் எடுத்து அசத்தினர்
.
மொஹாலியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தை வைத்து பல மீம்கள் போடப்பட்டு வருகின்றன.

மீம்ஸ்

நேற்று போட்டியில் இரண்டு முறை கீப்பர் கேட்ச் சென்றது. ஸ்மித், மேக்ஸ்வெல் இருவரின் கேட்சையும் தினேஷ் கார்த்திக்தான் பிடித்தார். ஆனால் இரண்டிற்கும் தினேஷ் கார்த்திக் விக்கெட் கேட்கவில்லை. அவர் விக்கெட்டா என்று சத்தம் போட்டு கேட்கவில்லை. நடுவருக்கு விக்கெட் கொடுக்கவில்லை. பொதுவாக கீப்பர் கேட்பதை வைத்தே ரிவ்யூ எடுக்கப்படும்.

தினேஷ்

தினேஷ்

ஆனால் தினேஷ் கார்த்திக் அமைதியாக இருந்தார். இருந்தாலும் இரண்டு முறையும் ரோஹித் சர்மா நம்பிக்கையாக விக்கெட் கேட்டார். இரண்டு முறையும் ரிவ்யூவில் விக்கெட் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தினேஷ் கார்த்திக் வாயை பிடித்து, அவுட் கேட்க மாட்டியா என்று ரோஹித் சர்மா சிரித்தபடி சொன்னார். அவரின் ரியாக்சன் மிகவும் காமெடியாக இருந்தது. தினேஷ் கார்த்திக்கு முத்தம் கொடுப்பது போல அவர் சென்றார். இதை வைத்து பல மீம்ஸ்கள் போடப்பட்டு வருகிறன்றன.

ரோஹித்

ரோஹித்

ஆசிய கோப்பை தொடரிலும், நேற்று நடந்த போட்டியிலும் இந்திய அணி சரியாக சேசிங் செய்யும் போதுதான் தோல்வி அடைந்தது. அணியின் பேட்டிங் நன்றாக இருந்தது. ஆனால் பவுலிங் மிக மோசமாக உள்ளது. அதோடு ரோஹித் கேப்டன்சி மீது கேள்விகள் வர தொடங்கி உள்ளன. அவர் சரியாக கேப்டன்சி செய்வது இல்லை என்று புகார்கள் வந்துள்ளன. இதை வைத்தும் மீம்ஸ்கள் பறக்கின்றன.

சாஹல்

சாஹல்

நேற்று இந்திய அணியின் டெத் பவுலிங் மோசமாக இருந்தது. இந்த முறையும் டெத் ஓவர்களில் புவனேஷ்வர் குமார் சொதப்பினார். நேற்று மட்டும் விக்கெட் எதுவும் எடுக்கமால் 52 ரன்களை அவர் கொடுத்தார். ஹர்ஷல் பட்டேல் போட்ட 18வது ஓவரில்தான் ஆட்டம் கையை விட்டு போனது. இந்த ஓவரில் மட்டும் இரண்டு சிக்ஸ் போனது. அதோடு இவர் மொத்தமாக 49 ரன்கள் கொடுத்தார். டெத் ஓவர்களில் இந்திய அணி மோசமாக சொதப்புவது, அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதை வைத்தும் மீம்ஸ்கள் போடப்பட்டு வருகின்றன.

கே. எல் ராகுல்

கே. எல் ராகுல்

கடந்த ஆசிய கோப்பை தொடரில் கே. எல் ராகுல் சரியாக ஆடவில்லை. ஏன் சர்வதேச தொடர்களிலேயே பொதுவாக ராகுல் சரியாக பேட்டிங் செய்வது இல்லை. ஐபிஎல் என்றால் அதிரடியாக ஆடுகிறார். ஆரஞ்சு கேப் வாங்குகிறார். ஆனால் சர்வதேச போட்டிகளில் சரியாக ஆடுவது இல்லை. நேற்று இதில் இவர் ஒரு கேட்சை வேறு மிஸ் செய்தார். இதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

 ஹர்த்திக் பாண்டியா

ஹர்த்திக் பாண்டியா

நேற்று போட்டியில் நம்பிக்கை அளித்த விஷயம் என்றால் அது ஹர்திக் பாண்டியா பேட்டிங்தான். இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டர் வீரராக அவர் உருவெடுத்துள்ளார். அதிலும் டி 20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக அவர் பார்மிற்கு திரும்பி உள்ளார். இது இந்திய அணிக்கு சாதகமான விஷயமாக மாறியுள்ளது. அவரின் ஆட்டம் பழைய யுவராஜ் சிங்கை பார்த்ததை போலவே இருந்ததாக நெட்டிசன்கள் பாராட்டி மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.