ராணுவ நடவடிக்கைக்கு 3,00,000 பேர் அழைப்பு ..! – அதிரவைக்கும் ரஷ்ய அதிபர் புதின்..!

உக்ரேனில் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கைக்கு மேலும் 3,00,000 பேர் அழைக்கப்படுவார்கள் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்துள்ளார். ரஷ்யாவை பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி அழித்திட மேற்கு நாடுகள் சதி செய்வதாகவும் அதிபர் புதின் குற்றம் சாட்டியுள்ளார்.
புதின் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் “எங்கள் நாட்டின் ஒருமைப்பாடு அச்சுறுத்தப்பட்டால், எங்கள் மக்களைப் பாதுகாப்பதற்கு அனைத்து வழிகளையும் நாங்கள் பயன்படுத்துவோம். இது வெற்றுப் பேச்சு அல்ல” என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் நோக்கில் ரஷ்யாவில் படைகளை திரட்டுமாறு புதின் உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னர் ராணுவ பயிற்சி பெற்று வேறு வேளைகளில் ஈடுபட்டுள்ள போருக்கு தகுதியுள்ளவர்களை திரட்ட அதிபர் புதின் அறிவுறுத்தியுள்ளார். இதுபோன்று ஏற்கனவே ராணுவத்தில் பணியாற்றி, படையில் இருந்து விலகி வேறு வேறு பணிகளில் உள்ளவர்களையும் திரட்ட புதின் ஆணையிட்டுள்ளார்.
ரஷ்யாவை பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி, இறுதியில் அழித்திட மேற்கு நாடுகள் சதி செய்வதாகவும் அதிபர் புதின் புகார் அளித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், உக்ரைனில் போர் ஏறக்குறைய ஏழு மாதங்களை எட்டியுள்ள நிலையில், 2 மில்லியன் இராணுவ இருப்புக்களை திரட்டுவதற்கு உத்தரவிட்டுள்ளதாக அறிவித்தார். விடுவிக்கப்பட்ட நிலங்களில் உள்ள மக்களைப் பாதுகாக்க ரஷ்யா அவசர முடிவை எடுக்க வேண்டிய கடமை இருப்பதால், இந்த நடவடிக்கை அவசியமானது என்று ரஷ்ய அதிபர் புதின் கூறினார்.
மேலும், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் ரஷ்யாவின் பகுதிகளாக மாற விரும்புகிறதா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்துவதற்கான திட்டங்களை அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ரஷ்ய அதிபர் புதினின் இந்த பேச்சு உலக நாடுகளின் தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.