வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: குருணை அரிசி ஏற்றுமதிக்கு செப்., 9 ம் தேதி மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில் சில நிபந்தனைகளுடன் குருணை அரிசி ஏற்றுமதிக்கு செப்.,30ம் தேதி வரை அனுமதி அளித்துள்ளது.
குருணை எனப்படும், உடைத்த அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. நம் நாட்டின் ஏற்றுமதியில் அரிசிக்கு முக்கிய பங்கு உண்டு. உள்நாட்டில் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், ஏற்கனவே சர்க்கரை, கோதுமை ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக தற்போது உடைத்த அரிசி ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. இதற்காக வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் மத்திய அரசு சில திருத்தங்களை செய்துள்ளது. உள்நாட்டில் அதிகரிக்கும் தேவையை கருத்தில் வைத்து மத்திய அரசு சமீபத்தில் தடை செய்தது.
இந்நிலையில் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் செயலாளர் சுதன்ஷீ பாண்டே செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பெய்த பலத்த மழை மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் நிலவிய வறட்சி ஆகியவை காரணமாக, கடந்தாண்டை விட இந்தாண்டு நெல் பயிரிடும் பரப்பளவு கணிசமாக குறைந்து உள்ளது.இதன் காரணமாகவே உடைத்த அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோழி வளர்ப்பிற்கு குருணை அரிசி தீவனம்
கோழி வளர்ப்புத் துறையில் குருணை அரிசி தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது. கோழி வளர்ப்புத் துறைக்கான உள்ளீடு செலவில் குருணை அரிசி தீவனத்தின் பங்களிப்பு 60% ஆகும். எனவே விலை உயர்வால் பாதிப்புக்கு தள்ளப்படும் நிலை எற்பட்டுள்ளது.
காரிப் பயிர்கள்:
காரிப் பருவத்தில் நெல் சாகுபடி பரப்பளவு முந்தைய பருவத்தை விட 5-6 சதவீதம் குறைவாக உள்ளது. காரிப் பயிர்கள் பெரும்பாலும் பருவமழை காலமான ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் விதைக்கப்படுகின்றன. மேலும் அக்டோம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் விளைச்சல் அறுவடை செய்யப்படுகிறது. ஜூன் மாதத்தில் பருவமழை முன்னேற்றம் மற்றும் நாட்டில் வளர்ந்து வரும் சில முக்கிய பகுதிகளில் ஜூலை மாதத்தில் அதன் சீர்ற்ற பவல் ஆகியவை விதைக்கப்பட்ட பகுதியின் வீழ்ச்சிக்கு முதன்மையான காரணமாக இருக்கலாம்.
இதனால் காரிப் பருவத்தில் அரிசி உற்பத்தி மோசமான சூழ்நிலையில் 10-12 மில்லியன் டன்கள் குறையும் வாய்ப்புள்ளது. இதனால் குருணை அரிசி ஏற்றுமதி மீதான தடை முக்கியத்துவம் பெறுகிறது. இது பயிர் வாய்ப்புகள் மற்றும் முன்னோக்கி செல்லும் விலைகள் இரண்டிலும் தாக்கத்தை எற்படுத்தும். சில நிபந்தனைகளுடன் குருணை அரிசி ஏற்றுமதிக்கு செப்.,30ம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
குருணை அரிசி எற்றுமதி செய்யப்பட்டால், உள்நாட்டில் அதன் மொத்த மற்றும் சில்லறை விற்பனை விலை அதிகரித்தது. இதைக் கருத்தில் கொண்டு ஏற்றுமதிக்கு செப்., 9 ம் தேதி மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில் சில நிபந்தனைகளுடன் குருணை அரிசி ஏற்றுமதிக்கு செப்.,30ம் தேதி வரை அனுமதி அளித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement