18 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுள்ள வெடிபொருட்களை, அனுமதிப்பத்திரம் இன்றி கெப் வண்டியில் ஏற்றிச் சென்ற சந்தேகநபர் ஒருவரை தொம்பே பனன்வல பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அந்த சந்தேகநபர் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 25 கிலோ கிராம் எமோனியா நைட்ரேட் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடம் இருந்து 5 இலட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொம்பே பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடையவர். மேலதிக விசாரணைகளுக்காக தொம்பே பொலிஸாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.