கடவுளுக்கு இரக்கமே இல்லையா? வெண்ணிலா கபடிக்குழு நடிகரின் பரிதாப நிலை!

சென்னை : வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்த நடிகர் ஹரிவைரவனின் தற்போதைய நிலையை பார்த்தால் கறையாத கல்நெஞ்சமும் கறைந்துவிடும்.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் வெண்ணிலா கபடிகுழு. இந்த படத்தில் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இவருடன் அப்புகுட்டி, பரோட்டா முரளி, விஜய் சேதுபதி, சரண்யா மோகன், சூரி, ஹரி வைரவன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

வெண்ணிலா கபடிக்குழு

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் விஷ்ணு விஷாலின் நண்பர்களில் ஒருவராக நடித்து பரீட்சயமானவர் நடிகர் ஹரிவைரவன். இந்த படத்தைத் தொடர்ந்து குள்ளநரி கூட்டம், நான் மகான் அல்ல படங்களில் நடித்துள்ளார். பட வாய்ப்புக்காக அலைந்து திரிந்து கொண்டிருந்த ஹரிவைரவனுக்கு பட வாய்ப்புகள் வந்ததால் மகிழ்ச்சியில் இருந்தார்.

கோமாவில்

கோமாவில்

ஆனால், இந்த மகிழ்ச்சி நீண்டநாட்கள் நிலைக்கவில்லை திடீரென்று ஒருநாள் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய், பேச்சு மூச்சு இல்லாமல் உடலில் எந்த ஆசைவும் இல்லாமல் வீட்டில் கிடந்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேல் கோமாவில் இருந்துள்ளார்.

இவருக்கா இந்த நிலைமை

இவருக்கா இந்த நிலைமை

அவரது மனைவி இறைவனிடம் போராடி அவரை மீட்டுக்கொண்டு வந்துள்ளார். இந்த செய்தி யூடியூப் சேனலில் வெளியான பிறகே பலருக்கும் தெரிந்துள்ளது. இவரின் சூழ்நிலையைப் பார்க்கும் பொழுது இவருக்கா இந்த நிலைமை என்று கேட்கும் அளவிற்கு முகம்,கை,கால் என அனைத்தும் வீங்கிய நிலையில் இருக்கிறார்.

நாளுக்கு நாள் மோசம்

நாளுக்கு நாள் மோசம்

சர்க்கரை வியாதி, இதய நோய், இரண்டு கிட்னிகளும் செயலிழப்பு என உடல் முழுக்க பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டு இன்று நடக்க கூட முடியாமல் மனைவியின் துணையுடன் ஒவ்வொரு நாளையும் கழித்து வருகிறார். ஹரிவைரவனின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அவரது கண்ணீர் மல்க கூறுகிறார்.

இரக்கமே இல்லையா?

இரக்கமே இல்லையா?

மருத்துவர்கள் ஆறு மாதம் தான் உயிரோடு இருப்பார் என கை விரித்து விட்டதாகவும், தன்னை கருணை கொலை செய்ய சொல்லி கேட்டதாகவும் ஹரிவைரவனின் மனைவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். நடிகராக வேண்டும் என்றும், கஷ்டப்பட்டு அலைந்து திரிந்து, ஓரிரு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், இப்படி ஒரு துயரமா கடவுளே கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா? என பலர் கேட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.