வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அமிர்தசரஸ்: பஞ்சாப் சட்டசபையில் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் உத்தரவை அம்மாநில கவர்னர் திடீரென திரும்ப பெற்றார்.
பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த்சிங் சமீபத்தில் ஜெர்மன் சென்றிருந்த போது குடித்து விட்டு விமானத்தில் ஏறிய சம்பவத்தை அடுத்து, முதல்வர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், சட்டசபை சிறப்பு கூட்டத்தை நாளை செப். 22 கூட்டி நம்பிக்கையிலா தீர்மானம் கொண்டு வர கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இதையடுத்து கவர்னரின் பிறப்பித்த உத்தரவு அதிகாரப் பூர்வமாக வெளியானது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று (செப்.21) பஞ்சாப் கவர்னரின் முதன்மை செயலாளர் , தலைமை செயலருக்கு அனுப்பிய கடிதத்தில், சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் குறித்து, சில முக்கிய விதிமுறைகள் குறிப்பிடப்படவில்லை என்பதால் நாளை நடக்கவுள்ள சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட பிறப்பித்த கவர்னரின் உத்தரவு திரும்ப பெறப்படுவதாக கூறப்பட்டு்ள்ளது. கவர்னரின் இந்த உத்தரவு பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement