அமேசான் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்! எதற்காக..?

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் விதித்த ஒரு லட்ச ரூபாய் அபராதத்தை கட்டுமாறு இணையதள வணிக நிறுவனமான அமேசானுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமேசானில் இந்திய தரச் சான்றான BIS இல்லாமல் விற்கப்பட்ட பிரஷர் குக்கர்கள் தொடர்பான புகாரில், ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதுபோன்ற தரமற்ற பிரஷர் குக்கர்களை திரும்பப் பெறுமாறும் நுகர்வோருக்கு பணத்தை திருப்பித் தருமாறும் உத்தரவிடப்பட்டது.

அதை எதிர்த்து அமேசான் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் விதித்த ஒரு லட்ச ரூபாய் அபராதத்தை செலுத்த உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம், அடுத்த கட்ட விசாரணையை நவம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.