வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி, 22 ஆயிரத்து 842 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், குஜராத்தைச் சேர்ந்த ஏ.பி.ஜி., ஷிப்யார்டு என்ற கப்பல் கட்டும் நிறுவன தலைவர் ரிஷி கமலேஷ் அகர்வாலை இன்று சி.பி.ஐ. கைது செய்தது.
குஜராத்தின் சூரத் நகரை தலைமையிடமாக வைத்து செயல்படும், ஏ.பி.ஜி., ஷிப்யார்டு நிறுவனம், வங்கிகளில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி, 2019ல் சி.பி.ஐ.,யில் புகார் கொடுத்தது.
இதையடுத்து வங்கிகள் கொடுத்த தகவல்கள் மற்றும் தனியார் அமைப்பின் வாயிலாக சி.பி.ஐ., நடத்திய தணிக்கையில், கப்பல் கட்டும் நிறுவனம், பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி, 22 ஆயிரத்து, 842 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்தது தெரிய வந்தது.இதையடுத்து கடந்த ஏப்ரலில் ஏ.பி.ஜி., ஷிப்யார்டு என்ற கப்பல் கட்டும் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில், அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்..
இந் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரிஷி கமலேஷ் அகர்வால், செயல் இயக்குனர் சந்தானம் முத்துசாமி, இயக்குனர்கள் அஸ்வினி குமார், சுஷில் குமார் அகர்வால், ரவி விமல் நிவேதியா உள்ளிட்டோர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக ரிஷி அகர்வாலை சி.பி.ஐ. கைது செய்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement