அஷீஷ் கச்சோலியா போர்ட்போலியோ: மல்டிபேக்கர் பங்குகளில் ஒன்றான பெஸ்ட் அக்ரோலைஃப், விவசாய துறையினை சேர்ந்த ஒரு பங்காகும். இப்பங்கின் விலையானது கடந்த 6 வருடங்களில் 8,000% ஏற்றம் கண்டுள்ளது.
இது முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த பங்குகளில் ஒன்றாக உள்ளது.
ஏனெனில் செப்டம்பர் 20, 2022 அன்று மேற்கொள்ளப்பட்ட மொத்த ஒப்பந்தத்தில், குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் 1.78 லட்சம் பங்குகளை, 1222.60 ரூபாய்க்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 21.76 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டினை நிறுவனம் செய்துள்ளது.
உலகிலேயே விலை உயர்ந்த பங்கு எது தெரியுமா..? ஒரு பங்கின் விலை 3.3 கோடி ரூபாய்..!
அஷீஷ் கச்சோலியா பங்கு
இந்த விவசாய பங்கு அஷீஷ் கச்சோலியாவின் போர்ட்போலியோவிலும் உள்ளது குறிப்பிடத்தத்து. அவரின் வசம் 3.18 லட்சம் பங்குகள் 940.88 ரூபாய் என்ற மதிப்பில் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட் பங்குகளை வாங்கிய இந்த பங்கு விலை, உச்சவிலையில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்றைய உச்சமாக 1307.50 ரூபாய் என்ற லெவலை தொட்டது.
மல்டிபேக்கர் பங்கு
பெஸ்ட் அக்ரோலைஃப் பங்கு விலையானது ஒரு பங்குக்கு 15.75 ரூபாயில் இருந்து, (ஏப்ரல் 29, 2016) இன்ரு 1307 ரூபாய் என்ற லெவலுக்கு ஏற்றம் கண்டுள்ளது. கடந்த 6 வருடங்களில் 8000% ஏற்றம் கண்டுள்ளது.
இதே கடந்த 1 வருடத்தில் 70% ஏற்றத்திலும், இந்தே இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, 25% ஏற்றத்திலும் காணப்படுகின்றது.
புராபிட் புக்கிங்கால் லாபம்
உச்சத்தில் லாபம் புக் செய்த நிலையில் இந்த பங்கு 1309.50 ரூபாய் என்ற லெவலில் இருந்து, 1280 ரூபாய் வரை சரிவினைக் கண்டது குறிப்பிடத்தக்கது. இந்த மல்டிபேக்கர் பங்கு விலையானது மூன்று வாரத்தில் 36% லாபம் கொடுத்துள்ளது.
அன்னிய முதலீடுகள்
குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட் , அஷீஷ் கச்சோலியா மட்டும் அல்ல, அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்களும் உள்ளனர். நோமுரா சிங்கப்பூர் 3,48,550 பங்குகள் அல்லது 1.47% பங்குகளை தன் வசம் உள்ளது. ரோசோனன்ஸ் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட் நிறுவனமும் 20,94,406 அல்லது 8.86% பங்குகள் உள்ளன.
Best Agrolife shares have also been bought by various mutual fund companies
Best Agrolife shares have also been bought by various mutual fund companies/மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் பேவரைட் பங்கு.. இவ்வளவு பேர் வாங்கியிருக்காங்களா.. உங்ககிட்ட?