அரசு பள்ளியில் மதுபான பெட்டிகள் ..! – காவல் துறை சோதனையில் அதிர்ச்சி தகவல்..!

பீகாரில் அரசு பள்ளியில் 140 மதுபான பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பீகாரில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு மகளிருக்கு அளித்த வாக்குறுதியின்படி, கடந்த 2016-ம் ஆண்டு முதல் மதுபான உற்பத்தி, விற்பனை உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டு அமலில் உள்ளது.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் போதைக்கு மக்கள் அடிமைகளாகி உள்ளனர். இதற்கு பல்வேறு அரசியல் செயல்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பல அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக மது ஒழிப்பை முன்னிறுத்தி வாக்கு கேட்கின்ற சூழலும் நிலவுகிறது. அதுவும் போதை பழக்கம் என்பது பள்ளி மாணவர்களும் இதற்கு அடிமைகளாகி உள்ளது பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் தருகிறது. இது பெரும் சமூக சீர்கேடாகவும் விளங்குகிறது.

பீகாரில் நடந்துள்ள ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் வைஷாலி நகரில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அறை ஒன்றில் மதுபான பாட்டில்கள் கொண்ட 140 பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்தது கண்டுபிடிக்கப்பட்டது . இதுபற்றி தகவல் அறிந்து வந்த லால்கஞ்ச் காவல் நிலைய ஆய்வாளர் பிரஜேஷ் சிங் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அந்த 140 பெட்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த அறையை மதுபான விற்பனையாளர்கள் சட்ட விரோத வகையில் பயன்படுத்தி வந்துள்ளனர். அதில், மதுபானங்கள் கொண்ட பெட்டிகளை பதுக்கி வைத்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.