வாழ்க்கையில் ஒருமுறையாவது விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என ஒவ்வொருவருக்கும் மனதில் ஆசையிருக்கும்.
ஆனால் அதே நேரத்தில் விமானத்தில் பயணம் செய்வதற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்பதன் காரணமாக பலர் தங்கள் ஆசையை ஒத்தி போட்டு வருவார்கள்.
இந்த நிலையில் ஏர் ஏசியா நிறுவனம் 50 லட்சம் பேர்களுக்கு இலவச விமான சேவை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
யுபிஐ உடன் இணைக்கப்படும் ரூபே கிரெடிட் கார்டு.. 3 வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

ஏர் ஏசியா
இந்தியாவின் ஏர்லைன்ஸ் சேவை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்று ஏர் ஏசியா என்பதும் இந்த நிறுவனத்தின் சேவை பயணிகளுக்கு மிகுந்த திருப்தியை அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

50 லட்சம் இலவச டிக்கெட்டுக்கள்
இந்த நிலையில் ஏர் ஏசியா நிறுவனம் 50 லட்சம் இலவச டிக்கெட்டுகளை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த விற்பனை செப்டம்பர் 19 முதல் செப்டம்பர் 25ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இந்த நாட்களில் டிக்கெட்டை முன்பதிவு செய்தால் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 19 முதல் செப்டம்பர் 25ஆம் தேதி வரை முன்பதிவு செய்யும் நபர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் அக்டோபர் 28 வரை தான் பயணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாடு மற்றும் வெளிநாடு
உள்நாட்டில் உள்ள எந்த நகரங்களுக்கு வேண்டுமானாலும் நீங்கள் ஏர் ஏசியாவின் இலவச டிக்கெட் மூலம் பயணம் செய்யலாம் என்றும் அதே போல் ஒரு சில சர்வதேச பயணத்திற்கு இந்த இலவச பயண வசதிகளை பெறலாம் என்றும் ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பாக பாங்காக், கிராபி, ஃபூகெட், ன்ஹா ட்ராங், லுவாங் பிரபாங், நாகோர்ன், நாகோர்ன் ஸ்ரீதாமத், மாண்டலே, புனோம் பென் மற்றும் பினாங்கு ஆகிய நகரங்களுக்கு இலவசமாக பயணம் செய்யலாம்.

ஏர் ஏசியா செயலி
ஏர் ஏசியா நிறுவனத்தின் இலவச டிக்கெட்டை பெறுவதற்கு முதலில் அந்நிறுவனத்தின் செயலியை மொபைல் போனில் டவுன்லோட் செய்ய வேண்டும். அதன் பின் உங்கள் இலவச இருக்கை முன்பதிவு செய்து கொள்ளலாம். அது மட்டுமின்றி ஏர் ஏசியா நிறுவனத்தின் இணைய தளம் சென்றும் உங்கள் இலவச இருக்கையை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்ற முடியாது
ஒருவர் முன்பு முன்பதிவு கிரிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்ற முடியாது என்பதும் அதேபோல் குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுக்கள் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
Air Asia give 50 lakhs free tickets to passengers till 25 September!
This airline offers 5 million free seats in sale till 25 September | இலவசமாக விமானப்பயணம் செய்ய வேண்டுமா? 50 லட்சம் பேருக்கு வாய்ப்பு தரும் நிறுவனம்!