சென்னை: சென்னையில் குடிநீர் வாரியம் தங்களது பகுதிகளின் எல்லைகளை மறு சீரமைப்பு செய்துள்ளது.
சென்னையில் குடிநீர் வழங்குதல் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணியை சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் செய்து வருகிறது. சென்னை குடிநீர் வாரிய நிர்வாக அமைப்பின் கீழ் சென்னை மாநகராட்சி வடக்கு, வட கிழக்கு, மத்திய, தெற்கு, தென் மேற்கு என்று 5 பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பகுதியிலும் 3 பகுதிகள் என்று மொத்தம் 15 பகுதிகள் உள்ளன. இந்த 15 பகுதிகளும் பகுதி பொறியாளர்களின் தலைமையில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் எல்லைகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டது. இதன் அடிப்டையில் உள்ளாட்சி தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில், இந்த மறு சீரமைப்பின் அடிப்படையில் குடிநீர் வாரியமும் தனது பகுதிகளின் எல்லைகளை மறு சீரமைப்பு செய்துள்ளது.
இதன்படி பகுதிகளின் புதிய எல்லை தொடர்பாகன விவரம் https://bnc.chennaimetrowater.in/#/public/find-my-new-ward என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இணையதளத்தில் தங்களின் மண்டலம், வார்டு, பில் எண் ஆகியவைற்றை சமர்பித்து உங்களின் புதிய பகுதி அலுவலம் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.