பாட்னா: பாஜக தான் எங்களின் மிகப்பெரிய எதிரி என்று லாலு பிரசாத் யாதவ் பேசியுள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ் உடல்நல பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளார். மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் இறங்கத் தொடங்கியுள்ளார். பாட்னாவில் நடைபெற்ற ஆர்ஜேடி மாநிலங்களவை கூட்டத்தில் கலந்துகொண்ட லாலு, பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.
கூட்டத்தில், “எனது சித்தாந்தத்தில் உறுதியாக நிற்கிறேன். பல கட்சிகள் பாஜகவுடன் சமரசம் செய்துகொண்டு மண்டியிட்டுள்ளன. ஆனால் நான் தலைவணங்க போவதில்லை. இப்போதில்லை எப்போதும் அடிபணிய மாட்டேன். பாஜக தான் எங்களின் மிகப்பெரிய எதிரி. அவர்களுக்கு நான் அடிபணிந்திருந்தால் இவ்வளவு நாள் சிறையில் இருந்திருக்க மாட்டேன்.
எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், 2024ல் பாஜகவை வேரோடு தூக்கி எறிய வேண்டும். விரைவில் டெல்லி சென்று சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் சந்திப்பேன்.” என்று ஆவேசமாக பேசியுள்ளார்.