நியூயார்க், :ஐ.நா., பொது சபை கூட்டத்தில் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை குறிப்பிட்டு, பாராட்டு தெரிவித்தார்.மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் சமீபத்தில் எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நடந்தது. அப்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது தொடர்பாக இருவரும் பேசியபோது, ‘இந்த யுகம் போருக்கானது அல்ல; எந்தப் பிரச்னைக்கும் ஜனநாயக ரீதியில் பேச்சு வாயிலாக தீர்வு காண வேண்டும்’ என, பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்நிலையில், ஐ.நா., பொது சபை கூட்டம் நியூயார்க்கில் நடக்கிறது. இதில் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று பேசியதாவது:பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டதுபோல், இந்த யுகம் போருக்கானது அல்ல. கிழக்கத்திய நாடுகளை எதிர்ப்பதால் மேற்கத்திய நாடுகள் மீது பழிவாங்கும் வகையில் செயல்படுவது சரியல்ல.தற்போது உலகெங்கும் உள்ள சவால்களை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement