அலிகார், :உத்தர பிரதேசத்தில், பள்ளிக்குள் முதலை நுழைந்ததையடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள் அலறியடித்து ஓடினர்.உ.பி.,யில் அலிகார் மாவட்டத்தில் கங்கை நதி அருகே காசிம்பூர் கிராமம் உள்ளது. இங்குள்ள அரசுப் பள்ளிக்குள், நேற்று முதலை ஒன்று புகுந்தது. இதைப் பார்த்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். பின் கிராமத்தினர் கம்புகளுடன் பள்ளிக்குள் நுழைந்து, முதலையை வகுப்பு அறைக்குள் வைத்து பூட்டினர்.’கிராமத்தின் அருகே கங்கை நதி பாய்கிறது.
இதனால், மழை வெள்ள நேரத்தில் கிராமத்துக்குள் முதலைகள் புகுந்துவிடுகின்றன. இது குறித்து உள்ளூர் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என, கிராமத்தினர் தெரிவித்தனர்.இது குறித்து, வன அதிகாரி திவாகர் வசிஷ்ட் கூறுகையில், ”பள்ளிக்குள் புகுந்த முதலை உயிருடன் பிடிக்கப்பட்டது. கிராமப் பஞ்சாயத்து நிர்வாகத்தினரின் உதவியுடன், இப்பகுதியில் நடமாடும் முதலைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement