புதுடில்லி, அண்டை நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டு, ‘கொரியர்’ நிறுவனம் வாயிலாக மும்பைக்கு கடத்த திட்டமிடப்பட்ட 33 கோடி ரூபாய் மதிப்பிலான 394 தங்க கட்டிகளை, வருவாய் புலனாய்வுத்துறையினர் மூன்று வெவ்வேறு இடங்களில் கைப்பற்றினர்.இது குறித்து வருவாய் புலனாய்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்ட அறிக்கை:அண்டை நாடுகளில் இருந்து வடகிழக்கு மாநிலமான மிசோரமுக்கு கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகள், கொரியர் சேவை வாயிலாக மஹாராஷ்டிராவின் மும்பைக்கு நுாதன முறையில் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, கொரியர் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில், மஹாராஷ்டிராவின் பிவாண்டியில் 19.93 கிலோ எடையுள்ள, 10.18 கோடி ரூபாய் மதிப்பிலான 120 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.இதே போல, பீஹாரின் பாட்னா மற்றும் புதுடில்லி நிறுவனங்களிலும் கடத்தல் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு, 33.40 கோடி ரூபாய். மொத்தம் 65.46 கிலோ உடைய 394 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement