ராஜ்கர்: மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி 5 இஸ்லாமியர்கள் கடந்த 13ம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் ராஜ்கர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருந்து 15ம் தேதி விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், இவர்கள் செவ்வாயன்று போபால் காங்கிரஸ் எம்எல்ஏ ஆரிப் மசூத்துடன் மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவை சந்தித்தனர். அப்ேபாது, ‘சிறையில் இருந்தபோது அதிகாரிகள், இஸ்லாமியர்கள் என தெரிந்தும் எங்களை கட்டாயப்படுத்தி தாடியை தாடியை மழித்துவிட்டனர். சிறையில் நாங்கள் அவமதிக்கப்பட்டோம் என்று தெரிவித்தனர்.
எனவே, சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்கள். இந்த விவகாரம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா உறுதி அளித்துள்ளார். இது குறித்து சிறை அதிகாரி எஸ்என் ராணா கூறுகையில், ‘அவர்களின் விருப்பத்தின்பேரில் தாடி எடுக்கப்பட்டு இருக்கலாம். சிறையில் அவரவர் மத நம்பிக்கையின்பேரில் தாடி, மீசை வளர்ப்பதற்கு சுதந்திரம் உண்டு. சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 இஸ்லாமியர்களில் 8 பேர் தாடி வளர்கின்றனர்.’’ என்றார்.