உத்தரப்பிரதேசம் மாநிலம் ரசூல்பூர் கிராமத்தை சேர்ந்த பள்ளியின் 40 வயதான ஆசிரியருக்கும், பள்ளியில் பயின்று வந்த மாணவிக்கும் (17) இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், இந்த சம்பவம் பள்ளியில் பரவ தொடங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியரும், மாணவியும் செப்டம்பர் 3ஆம் தேதியிலிருந்து காணாமல் போயிருக்கின்றனர். தன்னுடைய மகளை காணவில்லை என அந்த மாணவியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்திருக்கிறார்.
இந்தநிலையில், இது தொடரபாக போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு காட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதை கண்டுபிடித்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு சடலங்களை மீட்டெடுத்தனர். அதன் பிறகு கைப்பற்றப்பட்ட இரண்டு சடலங்களும் காணாமல் போன ஆசிரியர் மற்றும் மாணவியின் சடலங்கள் என தெரிய வந்தது. சம்பவ இடத்தில் தற்கொலைக்கான குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் அவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.