பரந்தூர் விமான நிலையம்; பதிவுத் துறை அறிவிப்பால் மக்கள் அஞ்சம்

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகளுக்கு நிலம் எடுப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அப்பகுதியில் உள்ள மக்கள் பத்திரப் பதிவு மேற்கொள்ள வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியரிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என்று பதிவுத் துறை அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் அமைக்கப்படவுள்ளதாக மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இதில் காஞ்சிபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பரந்தூர்,வளத்தூர், தண்டலம், நெல்வாய், மேல்பொடவூர், மடப்புரம், மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட எடையார்பாக்கம், குனராம்பாக்கம் மகாதேவி மங்கலம், ஏகனாபுரம்,சிங்கல்படி உள்ளிட்ட 12 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 4750 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க 12 கிராமத்தைச் சேர்ந்த மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக விளை நிலங்களுடன் குடியிருப்புகளும் அகற்றப்பட வாய்ப்புள்ளதாக அறிந்து ஏகனாபுறம் மக்கள் தினம்தோறும் வேலைக்கு சென்று விட்டு வந்து இரவு நேரங்களில் போராட்டங்களை நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கூடியவிரைவில் விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இனிமேல் அப்பகுதியில் உள்ள மக்கள் நிலம் தொடர்பாக பத்திரப் பதிவு செய்ய வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியரிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என்று பதிவுத் துறை அறிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.