தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் உள்ள அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் பி.எப்.ஐ அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தி வருகிறது. சென்னை மாநில புரசைவாக்கத்தில் உள்ள பி.எப்.ஐ தலைமை அலுவலகத்திலும் என்.ஐ.ஏ சோதனை நடத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்: பரந்தூர் விமான நிலையம்; பதிவுத் துறை அறிவிப்பால் மக்கள் அஞ்சம்

பி.எப்.ஐ அமைப்பின் அலுவலகங்களில் நள்ளிரவு முதல் விடிய விடிய சோதனை நடைபெறுகிறது. இந்நிலையில், இதனை கண்டித்து பி.எப்.ஐ கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதேபோல் எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளிலும் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகிறது.

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் சேர மக்களை ஊக்குவித்தல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள நபர்களின் குடியிருப்பு மற்றும் வளாகங்களில் தேசிய புலனாய்வு முகமையின் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பி.எப்.ஐ தலைவர் ஓ.எம்.ஏ சலாம் வீடு உட்பட பி.எப்.ஐ அமைப்பின் மாநில, மாவட்ட அளவிலான தலைவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ) மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என 10 மாநிலங்களில் நடத்தப்படும் முக்கிய நடவடிக்கையில், என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை மற்றும் மாநில காவல்துறை இணைந்து 100க்கும் மேற்பட்ட பி.எஃப்.ஐ உறுப்பினர்களை கைது செய்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.