மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றை விற்பனைக்கு கொண்டு வரும் நடைமுறையை சீர்படுத்த, மத்திய அரசு சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது.நாடு முழுதும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றை விற்பனைக்கு கொண்டு வருவதில் பல்வேறு முறைகேடுகளை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நிறுவனங்கள் டாக்டர்களுடன் கைகோர்த்து செயல்படுவதை தடுக்க வேண்டும் எனவும் ஏராளமானோர் கோரிக்கைகள் விடுத்தனர்.இதையடுத்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பரிந்துரையின் படி, ஐந்து நபர்கள் கொண்ட குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
‘நிடி ஆயோக்’ உறுப்பினர் வி.கே.பால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில், மருந்து துறை செயலர் எஸ்.அபர்ணா மற்றும் இணை செயலர், மத்திய குடும்ப நலத்துறை செயலர் ராஜேஷ் பூஷண், நேரடி வரிகள் வாரிய தலைவர் நிதின் குப்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இந்தக் குழுவிற்கு மருந்துகளை தயாரித்து விற்பனைக்கு அனுப்புவதில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை ஆய்வு செய்து, மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
– நமது சிறப்பு நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement