James Webb Telescope Image Of Neptune: நெப்டியூனின் அழகை மட்டுமல்ல ரகசியங்களையும் ஜேம்ஸ் வெப் தொலைகாட்சி புகைப்படங்களாக பதிவு செய்து அனுப்பி உள்ளது. 2022 செப்டம்பர் 21ம் நாளன்று நாசா வெளியிட்ட இந்த புகைப்படம் வைரலாகிறது. ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களில், நெப்டியூனின் வளையங்களைக் காட்டுகிறது. மிகவும் அதிக உயரத்தில் உள்ள மீத்தேன்-பனியைக் காட்டும் கிரகத்தின் தெற்கு அரைக்கோளத்தில் உள்ள பிரகாசமான புள்ளிகளின் வரிசையைக் காட்டும் படம் இது என்பதால் அனைவருக்கும் இது சுவராஸ்யமான புகைப்படங்களாக இருப்பதில் வியப்பில்லை. முதன்முறைய எடுக்கப்பட்டுள்ள இந்த அரிய புகைப்படமானது, நெப்டியூனின் வளிமண்டலம் தொடர்பான புதிய கோணத்தை காட்டுவதாக ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் அறிவியல் மற்றும் ஆய்வுக்கான மூத்த ஆலோசகர் மார்க் மெக்காக்ரியன் கூறினார்.
ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் அறிவியல் மற்றும் ஆய்வுக்கான மூத்த ஆலோசகர் மார்க் மெக்காக்ரியன், 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெப் திட்டத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
மேலும் படிக்க | இதுவரை யாரும் பார்க்காத பிரபஞ்சத்தின் பிரமாண்டமான காட்சி!
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, ஒளிரும் நெப்டியூன் மற்றும் அதன் நுட்பமான, தூசி நிறைந்த மோதிரங்களின் படத்தை எடுத்துள்ளது என்று நாசா புதன்கிழமை (2022, செப்டம்பர் 21) தெரிவித்துள்ளது. 1989 ஆம் ஆண்டில் நாசாவின் வாயேஜர் 2 மட்டுமே நெப்டியூன் தொடர்பான விண்வெளி ஆய்வுகளை மேற்கொண்டது. அதுதான், சூரியனில் இருந்து வெகு தொலைவில் உள்ள கிரகத்தின் தெளிவான காட்சியாக இருந்தது.
தற்போது, இதுவரை இல்லாத வகையில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் அகச்சிவப்பு இமேஜிங் திறன்கள், நெப்டியூனின் வளிமண்டலம் தொடர்பான புதிய தகவல்களை அறிய உதவுகிறது. ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட முந்தைய படங்களில், நெப்டியூன் அதன் வளிமண்டலத்தில் உள்ள மீத்தேன் காரணமாக ஆழமான நீல நிறத்தில் தோன்றுகிறது.
இருப்பினும், வெப்பின் முதன்மை இமேஜர் NIRCam ஆல் கைப்பற்றப்பட்ட அகச்சிவப்பு அலைநீளங்கள், கிரகத்தை சாம்பல் கலந்த வெண்மையாகக் காட்டுகிறது, பனிக்கட்டி மேகங்கள் மேற்பரப்பில் பரவுகின்றன.
மேலும் படிக்க | சனி கிரகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சனியின் வளையங்கள்
“நெப்டியூனின் வளையங்கள் அகச்சிவப்பு நிறத்தில் பிரதிபலிக்கின்றன, அவை பார்ப்பதற்கு மிகவும் எளிதாக இருக்கின்றன” என்று மெக்காக்ரியன் கூறினார்.
நெப்டியூனின் உச்சியில் ஒரு “புதிரான பிரகாசத்தையும்” நீங்கள் காணலாம் என்று நாசா இந்த புகைப்படத்தை வெளியிடும்போது வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. நெப்டியூன் கிரகம், சூரியனைச் சுற்றி வர 164 ஆண்டுகள் ஆகும் என்பதால், வானியலாளர்கள் அதன் வட துருவத்தை இன்னும் சரியாகப் பார்க்கவில்லை.
மேலும் படிக்க | செயற்கை கட்டிடத்தில் இயற்கையாக எதிரொலிக்கும் பிரபஞ்ச ரகசிய வீடியோ வைரல்
நெப்டியூனின் அறியப்பட்ட 14 நிலவுகளில் ஏழையும் வெப் கண்டறிந்துளது. பெரிதாக்கப்பட்ட படம், மிகவும் பிரகாசமான ஸ்பைக்கி நட்சத்திரமாகத் தோன்றுவதைக் காட்டுகிறது, ஆனால் உண்மையில் ட்ரைட்டான், நெப்டியூனின் விசித்திரமான, பெரிய நிலவு வெப்பின் புகழ்பெற்ற டிஃப்ராஃப்ரக்ஷன் ஸ்பைக்குகளால் ஒளிவட்டம் கொண்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
டிரைடன்
டிரைட்டான் பனியால் மூடப்பட்டிருக்கும், குள்ள கிரகமான புளூட்டோவை விட பெரியது மற்றும் நெப்டியூனை விட பிரகாசமாக தோன்றுகிறது. நெப்டியூன் “தன் மீது விழும் ஒளியின் பெரும்பகுதியை உறிஞ்சி கொள்கிறது” என்று மெக்காக்ரியன் கூறினார்.
ட்ரைட்டான், நெப்டியூனைச் சுற்றி வருவது, கடிகாரச் சுற்றுக்கு எதிர் திசையில் இருப்பதால், அது ஒரு காலத்தில் அருகிலுள்ள கைபர் பெல்ட்டில் இருந்து கிரகத்தின் சுற்றுப்பாதையில் கைப்பற்றப்பட்ட ஒரு பொருளாக இருந்ததாக நம்பப்படுகிறது. எனவே தற்போதைய படங்கள் மிகவும் சுவாரசியத்தை ஏற்படுத்துகின்றன” என்று மெக்காக்ரியன் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
மேலும் படிக்க | செவ்வாய் கிரகத்தில் சூரிய ஒளிவட்ட புகைப்படம்! நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவரின் சாதனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ