இந்தியாவில் முன்னணி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒரு நிறுவனமாக உள்ளது ஒன்பிளஸ் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தற்போது அதன் புதிய எடிஷன் போன் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த போன்
Oneplus 10R Prime Blue Edition
என்று அழைக்கப்படுகிறது. இந்த போன் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 10R போனில் உள்ள அதே வசதிகள் கொண்டிருந்தாலும் புதிதாக ஒரு கலர் ஆப்ஷனுடன் வெளியாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனை அமேசான் ஷாப்பிங் தளத்தில் வாங்கினால் கூடுதலாக 3 மாத அமேசான் ப்ரைம் சந்தா சலுகை நமக்கு கிடைக்கும். இந்த போன் சிங்கள் வேரியண்ட் ஆப்ஷனுடன் கிடைக்கிறது.
Apple iphone 14 series ஐபோன்களில் பிரச்சனை! அடுத்த வார இறுதிக்குள் சரியாகும்!
ஸ்மார்ட்போன் விலை மற்றும் சலுகைகள்
இந்த போன் விலை 32,999 ஆயிரம் ரூபாய் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. SBI கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் வாடிகையளர்களுக்கு 1750 ரூபாய் உடனடி சலுகை கிடைக்கிறது. பழைய போன்களை கொடுத்து இந்த போனை வாங்க நினைத்தால் 15,200 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி விலை கிடைக்கிறது.
போன் விவரங்கள்
போனில் மிகப்பெரிய வேப்பர் சேம்பேர் உள்ளது. இது ஒன்பிளஸ் போன்களிலேயே மிகப்பெரிய வேப்பர் சேம்பர் ஆகும். இதில் 6.7 இன்ச் பிலுயிட் AMOLED டிஸ்பிலே வசதி, 120HZ ரெப்பிரேஷ் ரேட் உள்ளது.
இதில் கேமரா வசதிக்காக 3 ட்ரிபிள் கேமரா சிஸ்டம் உள்ளது. ஒரு 50MP Sony IMX 766 முக்கிய கேமரா, 8 MP ultra-wide camera, 2MP macro camera, எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS), சிறந்த போட்டோக்களை பெரும் வசதியும் உள்ளது.
மேலும் சார்ஜிங் வசதியாக 80W Super VOOC சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் 100% சார்ஜிங் 32 நிமிடங்களில் அடைந்துவிடும்.
Xiaomi 12 pro விலை தள்ளுபடி! இவ்வளவு கம்மியான விலைக்கு Qualcomm Snapdragon 8 Gen 1 மாடல் போனா?
இதில் Mediatek நிறுவனத்தின் தலைசிறந்த சிப் Dimensity 8100 MAX AI மற்றும் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் OxygenOS வசதி கொண்டுள்ளது. இந்த ஆண்டின் சிறந்த பிளாக்ஷிப் போனாக இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்