வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: புதுடில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீது என்ஐஏ சோதனைகள், குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என கேரளா கோழிக்கோடு, டில்லி, மும்பை, அசாம், தெலுங்கானா, பெங்களூரூ, லக்னோ, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேசிய புலனாய்வு படையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை மேற்கோண்டனர்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை, சேர்ந்த 106 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதில் கேரளாவில் 22 பேரும், கர்நாடாகாவில் 20 பேரும், ஆந்திரா பிரதேத்தில் 5 பேரும், அசாமில் 9 பேரும், டில்லியில் 3பேரும், மத்திய பிரதேசத்தில் 4 பேரும், புதுச்சே ரியில் 3பேரும், தமிழகத்தில் 10 பேரும், உத்திர பிரதேசத்தில் 8 பேரும், ராஜஸ்தானில் 2 பேரும் என மொத்தம் 106 பேரை கைது செய்துள்ளதால், பல்வேறு இடங்களில் பரப்பரப்பு நிலவி வருகிறது.
இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்எஸ்ஏ, உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜி,, என்ஐஏ உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ரெய்டுகள் குறித்த முழு விவரங்களை கேட்டறிந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement