ஒருபக்கம் இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு சென்று செட்டில் ஆகும் பணக்காரர்கள் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது.
இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்று நிரந்தரமாக தங்குவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
குறிப்பாக பாதுகாப்பு மற்றும் தொற்று இல்லாத நாடுகளில் வசிக்க வேண்டும் என்பதே பணக்காரர்களின் விருப்பமாக உள்ளது என்பது ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த 3 பங்குகளை வாங்கலாம்.. தரகு நிறுவனத்தின் சூப்பர் பரிந்துரை!
பொருளாதார வளர்ச்சி
உலகில் மிக வேகமாக பொருளாதார நிலையில் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று இந்தியா. கொரோனா தொற்று காலத்தில் கூட பொருளாதாரத்தில் மற்ற நாடுகளைவிட இந்தியா சிறப்பான முறையில் வளர்ச்சி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டை விட்டு வெளியேறும் பணக்காரர்கள்
ஆனால் அதையெல்லாம் மீறி இந்தியாவில் உள்ள பல பணக்காரர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெவ்வேறு நாடுகளில் செட்டில் ஆகி வருகின்றனர் என்ற செய்திகள் வருத்தத்தை அளிக்கின்றன. சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பணக்காரர்கள் தங்கள் சிறந்த வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக வெளிநாடு செல்கிறார்கள் என்றும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளிநாடு சென்று அங்கு நிரந்தரமாக தங்குவதை விரும்புகிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாழ தகுதி இல்லாத நாடா?
ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு பணக்காரர்கள் செல்வதால் இந்தியாவில் வாழ நல்ல இடங்கள் இல்லை என்பது அர்த்தமில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அதிகரிப்பு
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியா லட்சக்கணக்கான பணக்காரர்களை கொண்டு உள்ளது. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டில் முதலீடு செய்யும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. அந்த முதலீட்டை அவ்வப்போது அதிகரித்துவரும் பணக்காரர்கள் ஒரு கட்டத்தில் அந்த நாடுகளிலேயே நிரந்தரமாக தங்க விரும்புகிறார்கள் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நாடுகள்
வெளிநாடுகளில் நிரந்தரமாக தங்குவதற்கு பணக்காரர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருக்கிறது என்றும் குறிப்பாக வர்த்தக நாடுகளில் வசிக்க பலர் விரும்புகிறார்கள் என்றும் அந்நாட்டின் குடியுரிமையை பெற முயற்சித்து வருவதாகவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்தெந்த நாடுகள்
மேலும் தொற்றுநோய் போன்ற இக்கட்டான சூழ்நிலையில் பணக்காரர்கள் வெளிநாட்டில் தங்குவதை விரும்புகிறார்கள் என்றும் அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் பெரும்பாலும் ஐக்கிய அரபு எமிரேட், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சொந்த வீடுகளை வாங்கி நிரந்தரமாக குடியிருக்க நினைக்கிறார்கள் என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
9 லட்சம் பணக்காரர்கள்
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 9 லட்சம் பணக்காரர்கள் இந்தியாவில் தங்கள் பாஸ்போர்ட்டை ஒப்படைத்து விட்டு வெளிநாடுகளில் நிரந்தரமாக தங்கி உள்ளார்கள் என்று ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகையில் 9 லட்சம் என்பது மிகவும் சிறிய பகுதியாக இருந்தாலும், கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது என்பதுதான்.
2022ல் மட்டும் 8,000 பணக்காரர்கள்
இந்திய அரசின் புள்ளி விவரங்களின்படி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த நாடாக உள்ளது என்றும் அந்த நாடுகளில் தங்குவதற்கு இந்தியர்கள் மிகவும் விரும்புகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. 2022ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 8 ஆயிரம் பணக்காரர்கள் நாட்டை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் நிரந்தரமாக குடி இருக்கிறார்கள் என்றும் அரசின் புள்ளிவிவர கணக்கு ஒன்று தெரிவித்துள்ளது.
8000 rich people can leave India in 2022, What is the reason?
8000 rich people can leave India in 2022, What is the reason? | 2022ல் மட்டும் இந்தியாவில் இருந்து வெளியேறிய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இவ்வளவா?