`உத்தர பிரதேசம் மாநிலம் ஞானவாபி மசூதிக்குள் உள்ள சுவர்களில் இந்து கடவுள்களை வழிபட அனுமதி கோரி இந்து பெண்கள் தொடர்ந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தது தான்’ என வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில், இன்று மூல வழக்கின் விசாரணை தொடங்கியுள்ளது. அதில் இஸ்லாமிய அமைப்புகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணசியில் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள ஹிந்துக் கடவுள் சிலையை வழிபட அனுமதி கோரி, ஹிந்துப் பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, ஞானவாபி மசூதியில் கள ஆய்வு செய்யவும், அதை, ‘வீடியோ’வாக பதிவு செய்யவும் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. கள ஆய்வின்போது, மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக புகைப்படங்கள் வெளியானது.
கள ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் இதுகுறித்து விசாரித்து முடிவு செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்ததில்லை என்று மசூதியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கிய மாவட்ட நீதிமன்றம் இந்த மனு விசாரணைக்கு உகந்தது என்றது.
இல்லையில் இந்த மூல வழக்கின் விசாரணை என்று வாரணாசி நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. இந்து அமைப்புகளின் மனு மீது பதிலளிக்குமாறு இஸ்லாமிய அமைப்புகளுக்கு வாரணாசி நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM