இவர்களுக்கெல்லாம் ரேஷன் கார்டு ரத்து? கூட்டுறவுத்துறை முக்கிய தகவல்

குடும்ப அட்டை வைத்திருக்கும் பயனாளி மூன்று மாதங்களாக ரேஷன் பொருட்களை வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டை ரத்து செய்யலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது சம்மந்தமாக மாநில அரசு முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று குடும்ப அட்டைதாரர்கள் வேண்டுகோள் வைத்து வந்தனர். இந்நிலையில், இதுகுறித்து கூட்டுறவுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் சிறிய அளவில் புதிதாக நெல் சேமிப்பு கிடங்கு 4.75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. இதனை கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தனியார் மயமாக்கப்படும் என்பது முற்றிலுமான வதந்தி.

மேலும் நுகர்பொருள் வாணிபக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் ரேஷன் பொருள் கடத்தல் சம்பந்தமாக இதுவரை 11 ஆயிரத்து 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 11.31 கோடி மதிப்பிலான அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என கூறினார்.

மேலும், மூன்று மாதங்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்பது வதந்தி என்றும் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்தில் வந்து வசிப்பவர்களுக்கும் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் பேட்டியளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.