மகாராணி இறுதிச்சடங்கை விட டயனாவின் இறுதிச்சடங்கை அதிகம் பார்த்த மக்கள்.
அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் தொலைக்காட்சியில் பார்க்கப்பட்டது தொடர்பான புள்ளிவிபரங்கள் வெளியீடு.
பிரித்தானிய மகாராணியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளை தொலைக்காட்சியில் பார்த்தவர்களின் எண்ணிக்கை இளவரசி டயானாவின் இறுதிச்சடங்கை பார்த்தவர்களை விட மிகவும் குறைவு என தெரியவந்துள்ளது.
மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ஆம் திகதி காலமானார். அவரின் இறுதிச்சடங்கு நிகழ்வு Westminster Abbeyல் நடைபெற்றது.
இதை பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் தொலைக்காட்சி நேரலையில் பார்த்தவர்களின் எண்ணிக்கை குறித்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பான புள்ளிவிபரங்களை பிரித்தானியாவின் Broadcasters Audience Research Board (Barb) வெளியிட்டுள்ளது.
அதன்படி அமெரிக்காவில் ராணியார் இறுதிச்சடங்கு நிகழ்வு 11.4 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
TIM GRAHAM PHOTO LIBRARY VIA GETTY /JAYNE FINCHER/PRINCESS DIANA ARCHIVE/GETTY /EDDIE MULHOLLAND-WPA POOL/GETTY
அதே சமயம் கடந்த 1997ல் உயிரிழந்த பிரித்தானிய இளவரசி டயானாவின் இறுதிச்சடங்கை அப்போது அமெரிக்காவில் 33.2 மில்லியன் மக்கள் பார்த்தனர்.
இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம்.
மேலும் பிரித்தானியாவில் மகாராணியின் இறுதிச்சடங்கு தொலைக்காட்சியில் 27 மில்லியன் பார்வையாளர்களையும், டயானாவின் இறுதிச்சடங்கு நிகழ்வு கடந்த 1997ல் 32 மில்லியன் பார்வையாளர்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு ஆச்சரிய உண்மை என்னவென்றால், இளவரசர் ஹரி மற்றும் இளவரசர் வில்லியமின் திருமணங்கள் அவர்களின் பாட்டியின் மரணத்தை விட தொலைக்காட்சியில் அதிகம் பார்க்கப்பட்டுள்ளது.