மும்பை: சிவசேனாவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், 56 ஆண்டு கால பாரம்பரியத்தை விட்டுத்தர மாட்டோம் எப்படியும் கூட்டத்தை நடத்துவோம் என்று உத்தவ் தாக்கரே அணியினர், தெரிவித்துள்ளனர்.
மும்பை, பால் தாக்கரே காலத்தில் இருந்து ஆண்டுதோறும் மும்பை சிவாஜி பார்க் பூங்காவில் சிவசேனா கட்சி சார்பில் தசரா பொதுக்கூட்டம் நடைபெறும். தற்போது சிவசேனாவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்துவதில் 2 அணிக்கும் இடையே போட்டி நிலவியது.
2 அணிகள் சார்பிலும் அங்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. மேலும் இரு அணியினரும் அந்த இடத்திற்கு மாற்றாக பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் வளாகத்திலும், எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்திலும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியினர் பாந்திரா குர்லா காம்ப்ளக்சில் தசரா பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கிடைத்தது. இதனால் சிவாஜி பார்க்கில் தங்களுக்கு பொதுக்கூட்டம் நடத்த எளிதாக அனுமதி கிடைத்து விடும் என்று சிவசேனா நம்பிக்கை தெரிவித்து இருந்தது.
ஆனால் மாநகராட்சி இரு அணிகளுக்கும் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி அளிக்க மும்பை மாநகராட்சி மறுத்துவிட்டது.
இந்த நிலையில் வரும் அக்., 5-ம் தேதி சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியினர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரனை நாளை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், 56 ஆண்டு கால பாரம்பரியத்தை விட்டுத்தர மாட்டோம் எப்படியும் கூட்டத்தை நடத்துவோம் என்று உத்தவ் தாக்கரே அணியினர், தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement