What to watch on Theatre & OTT: ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

செப்டம்பர் மாதத்தின் நான்காம் வாரத்தின் (23-ம் தேதி) எப்போதும் இல்லாத அளவுக்கு மொத்தம் 15 படங்கள் அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளன. அடுத்த வாரம் ‘நானே வருவேன்’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட பெரிய படங்கள் வரவிருப்பதால், பல சிறிய பட்ஜெட் படங்கள் இந்த வாரமே களம் இறங்கிவிட முடிவு செய்திருக்கின்றன. அவற்றின் பட்டியல் இதோ…

ஆதார் (தமிழ்)

ஆதார்

இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் நடிப்பில் உருவாகியுள்ளப் படம் ‘ஆதார்’. இப்படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி.சசிகுமார் தயாரித்திருக்கிறார். இதில் கட்டட தொழிலாளியாக இருக்கும் பச்சைமுத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் கருணாஸ். காணாமல்போன அவரது மனைவி எங்குச் சென்றார், என்ன ஆனார், அதன்பின் இருக்கும் அதிகார அரசியல் என்ன என்பதுதான் இப்படத்தின் கதைக்களம்.

பபூன் (தமிழ்)

பபூண்

இயக்குநர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ் மற்றும் அனகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம்தான் இந்த ‘பபூன்’. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

‘ட்ரிக்கர்’ (தமிழ்)

‘ட்ரிக்கர்’

இயக்குநர் சாம் அன்டன் இயக்கத்தில் அதர்வா, தான்யா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன் ஆகியோர் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் ‘ட்ரிக்கர்’. இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

குழலி (தமிழ்)

குழலி

சர்வதேச திரைப்பட விழாக்களில் சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை உள்ளிட்ட 16 விருதுகளை வென்ற திரைப்படம் ‘குழலி’. இயக்குநர் செரா. கலையரசன் இப்படத்தை இயக்கியுள்ளார். ‘காக்கா முட்டை’ படத்தில் சிறுவனாக நடித்த விக்னேஷ் இப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

ட்ராமா (தமிழ்)

ட்ராமா

அஜு கீழ்மாலா இயக்கத்தில் உருவாகியுள்ளத் திரைப்படம் ‘ட்ராமா’. நடிகர் கிஷோர், சார்லி, ஜெய் பாலா மற்றும் காவ்யா பெல்லு ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது ஒரு சிங்கிள் ஷாட் படம் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

ரெண்டகம் (தமிழ்)

ரெண்டகம்

அரவிந்த் சாமி, குஞ்சக்கோ போகன், ஈஷா ரெப்பா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘ரெண்டகம்’. இயக்குநர் ஃபெலினி இப்படத்தை இயக்கியுள்ளார். இதன் ஒரிஜினல் மலையாள வெர்ஷனான ‘Ottu’ இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியான நிலையில், அதன் தமிழ் டப்பிங் வெர்ஷன் இந்த வாரம் வெளியாகிறது.

Chattambi (மலையாளம்)

Chattambi

இந்தத் திரைப்படத்தை அபிலாஷ் எஸ்.குமார் இயக்கியுள்ளார். ஸ்ரீநாத் பாசி, செம்பன் வினோத் ஜோஸ், கிரேஸ் ஆண்டனி, மைதிலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Ormakalil (மலையாளம்)

Ormakalil (மலையாளம்)

இயக்குநர் எம் விஸ்வபிரதாப் இயக்கிய மலையாளத் திரைப்படம் ‘Ormakalil’. இதில் நடிகர் ஷாஜு ஸ்ரீதர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Krishna Vrinda Vihari (தெலுங்கு)

Krishna Vrinda Vihari

அனிஷ் ஆர். கிருஷ்ணா இயக்கத்தில் நாக சௌர்யா மற்றும் ஷெர்லி செட்டியா நடித்துள்ள ரொமான்டிக் நகைச்சுவை தெலுங்கு மொழித் திரைப்படம் இந்த ‘Krishna Vrinda Vihari’.

Dongalunnaru Jagratha (தெலுங்கு)

Dongalunnaru Jagratha

தெலுங்கு நடிகர்களான ஸ்ரீ சிம்ஹா, ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் நடிப்பில் சதீஷ் திரிபுரா இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் ‘Dongalunnaru Jagratha’.

Chup (இந்தி)

Chup

பாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர் ஆர்.பால்கி எழுதி இயக்கியுள்ள இந்திய ஹிந்தி மொழித் திரைப்படம் ‘Chup’. இப்படத்தில் துல்கர் சல்மான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், மேலும் சன்னி தியோல் குருதத்தாகவும், அவருடன் ஸ்ரேயா தன்வந்தரி மற்றும் பூஜா பட் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

Dhokha: Round D Corner (இந்தி)

Dhokha: Round D Corner

இந்தி மொழிப் படமான இப்படத்தை குக்கி குலாட்டி இயக்கியுள்ளார். பிரபலத் தயாரிப்பு நிறுவனமான T-Series இப்படத்தைத் தயாரித்துள்ளது. ஆர். மாதவன், அபர்சக்தி குரானா, தர்ஷன் குமார், குஷாலி குமார் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Avatar (ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி)

அவதார்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளியான ஹாலிவுட் திரைப்படம் ‘அவதார்’. வசூலில் பல ஆண்டுகள் முதல் இடத்தில் இருந்த படம். இதன் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கும் நிலையில் ‘அவதார்’ முதல் பாகம் மீண்டும் திரையரங்குகளில் நாளை வெளியாகியாகிறது.

Shin Ultraman (ENGLISH)

Shin Ultraman

ஜப்பானிய சூப்பர் ஹீரோ திரைப்படம் இது. ஹிடேக்கி அன்னோவால் எழுத்தில் இயக்குநர் ஷின்ஜி ஹிகுச்சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Shin Ultraman’.

OTT-யில் புதுசு என்ன?

இந்த வாரம் ஓ.டி.டி-யிலும் நிறையப் படைப்புகள் வெளியாகவிருக்கின்றன. ஆங்கிலத்தில் ‘The Barbara Met Alan’, ‘The Perfumier’, ‘Lou’, ‘Fullmetal Alchemist: The Final Alchemy’ ஆகிய படங்கள் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகின்றன. ஆஹா தளத்தில் தெலுங்குப் படமான ‘First Day First Show’ நேரடியாக வெளியாகிறது. அதேபோல் இந்திப் படமான ‘Babli Bouncer’ நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

LIGER

கடந்த வாரங்களில் திரையரங்குகளில் வெளியான சில படங்களும் ஓ.டி.டி-யில் இந்த வாரம் வெளியாகின்றன. விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான ‘லைகர்’ படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும், தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘திருச்சிற்றம்பலம்’ சன் நெக்ஸ்ட் தளத்திலும், அருள்நிதி நடிப்பில் வெளியான ஹாரர் த்ரில்லர் படமான ‘டைரி’ ஆஹா தளத்திலும் வெளியாகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.