காந்தி ஜெயந்தியும் ஆர்.எஸ். எஸ் ஊர்வலமும்!-நீதிமன்றம் போட்ட உத்தரவு!
தமிழ்நாட்டில் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகம் முழுவதும் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஊர்வலம் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இது தொடர்பாக உத்தரவிட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்
* தமிழகத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி அன்று சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லுபுத்தூர் உள்பட பல்வேறு இடங்களில் ஊர்வலம் செல்ல அனுமதி கோரி காவல்துறையிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டிருந்தன.
* இதற்கு காவல்துறை தரப்பில் பதில் எதுவும் தெரிவிக்கப்படாமல் இருந்த நிலையில், அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி ஆர்.எஸ்.எஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 12 ஆம் தேதி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
காவல்துறை பதில்
இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,
* ” ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் எந்த பாதையில் ஊர்வலம் செல்கிறார்கள் என்று முழுமையான தகவலை அளிக்கவில்லை.
* ஊர்வலத்தின் போது கோஷம் எழுப்பக்கூடாது, காயம் ஏற்படுத்தும் எந்த பொருட்களுக்கும் அனுமதி இல்லை.
* மேலும், சட்டம் ஒழுங்கு, மதநல்லிணக்கம் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பான எந்த ஒரு உறுதியையும் அவர்கள் வழங்கவில்லை.
இந்த விதிகளை பின்பற்றுவதாக உறுதி அளித்தால் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது” என்றார்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இதையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ” பொதுக்கூட்டம் நடத்தவும், ஊர்வலம் செல்லவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது. மேலும், இதுபோன்ற ஊர்வலத்தை காவல்துறை ஒழுங்குபடுத்தலாமே தவிர, அதற்கு அனுமதி மறுக்க முடியாது” என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், ”
* அக்டோபர் 2 ஆம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ் நடத்தும் ஊர்வலத்திற்கு வரும் 28ஆம் தேதிக்குள் அனுமதி அளிக்க வேண்டும்.
* மேலும், இந்த அணிவகுப்பு ஊர்வலத்திற்கான நிபந்தனை குறித்த விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
‘காந்தி ஜெயந்தி அன்று ஏன்’ என சர்ச்சை
நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கான அனுமதி கிடைப்பது உறுதியாகி உள்ளது. இருப்பினும் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் இடங்கள் வழியாக ஊர்வலம் செல்லவோ, சர்ச்சைக்குரிய கோஷம் எழுப்பவோ, ஊர்வலத்தினர் தங்களுடன் கூரிய ஆயுதங்கள் எதையும் எடுத்துச் செல்லவோ அனுமதிக்கப்பட மாட்டாது எனத் தெரிகிறது. இருப்பினும் நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரே இது தெளிவாகும்.
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்தும் நாள், காந்தி பிறந்த தினமாக இருப்பது குறித்து சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
ஆனால், அன்றைய தினம் ஞாயிறு விடுமுறை தினமாக இருப்பதால்தான், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அந்த நாளை தேர்ந்தெடுத்ததாக ஆர்.எஸ்.எஸ் தரப்பில் கூறப்படுகிறது.
கைகொடுக்காத ‘கிச்சன் கேபினட் அரசியல்’… சுப்புலட்சுமி ஜெகதீசன் வீழ்ந்த கதை!
ஏற்ற இறக்கங்களுடன் இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசனின் அரசியல் வாழ்வில் 2021 ஆம் ஆண்டு மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு அடைந்த தோல்வியே அவரின் அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது என்று கூறலாம்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகாவில் உள்ள வடக்கு புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வி.எஸ்.சின்னுசாமி -அங்காத்தாள் தம்பதிக்கு மகளாக பிறந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், கொடுமுடி அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். அரசியலில் ஆர்வம் கொண்ட இவர் ஆரம்பத்தில் அதிமுக-வில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1977 சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றியை கைவசமாக்கியதுடன், ஜவுளி, கதர்த் துறை அமைச்சராகவும் ஆனார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.
அப்போதைய அதிமுக அமைச்சரவையின் நிதி அமைச்சராக இருந்த நாஞ்சில் மனோகரனின், ஆதரவாளரான சுப்புலட்சுமி ஜெகதீசன் 1980இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியுற்ற பின் நாஞ்சில் மனோகரனுடன் அதிமுகவிலிருந்து வெளியேறி இருவரும் திமுக-வில் இணைந்தனர்.
மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…
10 மாநிலங்களில் என்.ஐ.ஏ சோதனை… பி.எஃப்.ஐ அமைப்பைச் சேர்ந்த 100 பேர் வரை கைது!
இந்தியாவில் உள்ள பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ மற்றும் அமலாக்க இயக்குநரகம் இன்று காலை முதல் சோதனை நடத்தியது.
தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், திண்டுக்கல், கன்னியாகுமரி, நாகர்கோவில், கோயம்புத்தூர், கடலூர், ராமநாதபுரம், தேனி, தென்காசி உள்ளிட்ட 16 இடங்களில், என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இது தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் கூறுகையில்…
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
“கைய கால உடைச்சு கம்பெனியை மூடிடுவேன்..!” – சீறிய தாம்பரம் திமுக எம்.எல்.ஏ… நடந்தது என்ன?!
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே மெல்ரோசாபுரத்தில் பூஜா கோயல் என்பவருக்கு சொந்தமாக 1.77 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தை டேஜுங் மோபார்ட்ஸ் (Daejung Moparts pvt ltd) என்ற தனியார் நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2028 வரை 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து செயல்பட்டு வருகிறது.
அதன்படி, ஹூண்டாய் உள்ளிட்ட முன்னணி கார் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை செய்து கொடுக்கிறது டேஜுங் மோபார்ட்ஸ் நிறுவனம். இதற்கிடையே, நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ-ஆக இருந்த ஆர்.கே.சர்மா என்பவர் ரூ.230 கோடி ஊழல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
கழுகார் அப்டேட்ஸ்: ஸ்டாலினைப் புகழும் ராமதாஸ்… ஓய்வெடுத்தே டயர்டான தினகரன்…
தமிழ்நாடு காங்கிரஸ். கூட்டத்தில், ‘அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தியைத் தேர்வு செய்ய வேண்டும், மாநிலத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை தேசியத் தலைவருக்கு வழங்குகிறோம்’ என இரண்டே இரண்டு தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
இந்தப் பொதுக்குழுவில் ஜோதிமணி உள்ளிட்ட ஐந்து எம்.பி-க்களும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்திருக்கிறார்கள். பொதுக்குழுவில் 689 பேர் கலந்துகொண்டதாகவும், அவர்களிடம் நுழைவுக் கட்டணமாக தலா 500 ரூபாய் வீதம் மொத்தம் 3,44,500 ரூபாய் வசூல் செய்யப்பட்டதாகவும் சொல்கிறார்கள். கூட்டம் காட்ட வேண்டும் என்பதற்காக, யாரென்றே தெரியாத பலரையும் அழைத்துவந்துவிட்டார்கள் என்று பேச்சு எழுந்திருக்கிறது…
மேலும், ‘கை வைத்தவர்மீது நடவடிக்கை இல்லை…துக்கத்தில் சசிகலா புஷ்பா தரப்பு’, ‘ஓய்வுக்குச் சென்ற தினகரன்’, ‘திமுக கூட்டணிக்கு அடிபோடும் ராமதாஸ்’, ‘கட்சி நிர்வாகிகளிடம் சீறிய அண்ணாமலை’ உள்ளிட்ட கழுகார் அப்டேட்ஸைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…
சுடுகாட்டுக்குப்பாதை… முடிவுக்கு வந்த 150 வருட சாதியவன்மம்! – சாதித்துக் காட்டிய ஊராட்சித் தலைவி!
பட்டியல் சமுதாய மக்களுக்கு நடக்கும் சாதிய பாகுபாடுகள் இன்னமும் நீர்த்துப்போகவில்லை என்பதை, தென்காசி மாவட்டத்தில் உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் சிறுவர்களுக்கு மளிகைக்கடையில் ஏற்பட்ட தீண்டாமை கொடுமை உரக்கச் சொல்லியிருக்கிறது.
இதேபோல் 150 வருடங்களாக சாதிய பாகுபாட்டோடு சுடுக்காட்டுக்கு பாதை கிடைக்காமல் அல்லாடி வந்த, நாமக்கல் மாவட்ட பட்டியல் இன மக்களுக்கு, தற்போது விடிவு கிடைத்திருக்கிறது. அந்த கிராமத்தின் ஊராட்சிமன்றத் தலைவியும், அவரின் தந்தையும் இதை நடத்திக் கொடுத்திருக்கிறார்கள்.
இது குறித்த விரிவான தகவலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…
உடல் பருமன்: எல்லோரையும் போல சாப்பிட்டாலும் சிலருக்கு மட்டும் வெயிட் போடுவது ஏன்?
ஏன் உடல் பருமனாக இருக்கிறது என்று கேட்டால், ‘எனக்கு ரொம்பவும் ஸ்ட்ரெஸ்’ என்பதில் தொடங்கி ‘அதிக வேலைப்பளு’ என்பது வரை பல காரணங்களைச் சொல்வார்கள். ‘எங்க குடும்பத்தில் எல்லாருமே இப்படித்தான்’, ‘நீர் உடம்பு சார் இது’, ‘தைராய்டு சார், உடல் பருமனைத் தவிர்க்கமுடியாது’… இப்படி யெல்லாம்கூட சிலர் என்னிடம் சொல்கிறார்கள்.
மட்டன், பிராய்லர் கோழி, நெய் போன்றவற்றை உணவில் சேர்ப்பதால் உடல் பருமனாகிவிடுகிறது என்று சிலர் நம்புகிறார்கள். அவர்களாகவே சில உணவுகளைத் தவிர்ப்பதும் உண்டு. உடல் பருமனுக்குச் சரியான காரணம் தெரியாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கிறார்கள்.
Ponniyin Selvan Exclusive: “ரஜினியை பழுவேட்டரையராக ஏன் நடிக்க வைக்கவில்லை”- மணிரத்னம் நேர்காணல்
கார்ததி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என சென்சேஷனல் நடிகர்கள் அனைவரையும் பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்களாக மாற்றி கச்சிதமாக களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.
உலகத் தமிழர்கள் எதிர்பார்த்திருக்கும் படைப்பு என்ற அளவில் பயங்கர மைலேஜிலிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படம் உருவான விதம், கதாபாத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டது என பல விஷயங்களை விகடனுக்காகப் தெரிவித்திருக்கிறார் மணிரத்னம்.