வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: ஐ.நா. பொதுச்சபையில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை கண்டிக்கின்றன என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.
மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவை பிரிக்கவும், பலவீனப்படுத்தி அழிக்கவும் முயற்சிக்கின்றன. அந்நாடுகள் கடந்த 1991ல் ரஷ்யாவை பிரித்ததாகவும், தற்போதும் அதேபோன்று பிரிக்க நேரம் வந்துவிட்டதாக பேசுகின்றனர். ரஷ்யாவை பல நாடுகளாக பிரிக்க வேண்டும் என்கின்றனர்.
உக்ரைன், அந்நிய கூலிப்படையினர், நாட்டவர்கள், நேட்டோ பயிற்சி பெற்ற வெளிநாட்டு ராணுவ வீரர்களை அழைத்து வருகிறது. இன்று நமது வீரர்கள், ஆயிரம் கி.மீ., தூர எல்லையில் போரிட்டு வருகிறது. ஒட்டுமொத்த மேற்கத்திய ராணுவ இயந்திரங்களுக்கு எதிராக போரிட்டு வருகிறது.. ரஷ்யர்கள் அதிகம் வசிக்கும் டான்பாஸ் பிராந்தியத்தை உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதே இந்த போரின் நோக்கம் ஆகும். இவ்வாறு புடின் நேற்று (செப்.,22) பேசினார்.
இது குறித்து ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியதாயதாவது: அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் பொறுப்புகளை பொறுப்பற்ற முறையில் புறக்கணிக்கும் வகையில், புதின் ஐரோப்பாவிற்கு எதிராக அணு ஆயுத அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
மேலும் ஐ.நா.வின் சாசனத்தின் அடிப்படை கொள்கைகளை ரஷ்யா வெட்கமின்றி மீறியுள்ளதாக கடுமையாக விமர்சித்தார். அத்துடன் அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டுள்ள போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறது. அதனால் தான் ஐ.நா. பொதுச்சபையில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரை கண்டிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement