1300 ஆண்டுகளுக்குமுன் மூழ்கிய கப்பல்.. இஸ்ரேல் கடற்கரையில் கண்டுபிடிப்பு..ஆராய்ச்சியாளர்கள் உற்சாகம்

இஸ்ரேல்: 1300 ஆண்டுகளுக்கு கடலில் மூழ்கிய பழங்கால கப்பலை கடற்கரை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதில் பழங்காலத்தைச் சேர்ந்த கலைப்பொருட்கள், பானைகள் உள்ளிட்டவை கண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் கரையோரத்தில் பழங்கால கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்கரை ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு கடலில் அடிப் பகுதியில் டைவிங் செய்திருந்த இருவர், ஒரு மரத்துண்டு ஒட்டி இருப்பதைக் கண்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் கடலுக்கு அடியில் சென்று பார்த்தபோது, சுமார் 25 மீட்டர் நீளம் கொண்ட வால்நெட் மரங்களால் செய்யப்பட்ட கப்பலை கண்டுபிடித்துள்ளனர். அந்த கப்பலுக்குள் பழங்கால பானைகளும், சில கலைப் பொருட்களும் கிடைத்துள்ளன.

எவ்வளவு ஆண்டுகள் பழமையானது?

இதனால் உற்சாகமடைந்த அதிகாரிகள், கப்பலை அகழாய்வு செய்துள்ளனர். அப்போது பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதில் கி.பி.7 அல்லது 8ம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களின் ஆட்சிக்காலத்தில் மத்திய தரைக்கடல் பகுதியை இஸ்லாமியர்கள் தனது ஆட்சி எல்லையை விரிவுபடுத்தியதாகவும் அப்போது கொதிகலனை ஏற்றி சென்ற கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எப்படி விபத்து நிகழ்ந்தது?

எப்படி விபத்து நிகழ்ந்தது?

1300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கடற்கரை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ள நிலையில், புயல் காரணமாகவோ அல்லது அனுபவமில்லாத கேப்டனாலோ கப்பல் விபத்தில் சிக்கி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

 இஸ்ரேல் வரலாறு

இஸ்ரேல் வரலாறு

கி.பி 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கப்பல் விபத்து, மதப் பிளவு இருந்த போதும் மத்தியதரைக் கடலின் மற்ற பகுதிகளுடன் வர்த்தகம் நீடித்தது என்பதற்கு சான்றாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இஸ்ரேலில் உள்ள வரலாற்று புத்தகங்களில், மத்தியத்தடை கடலில் வர்த்தகம் நடைபெறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கலைப்பொருட்கள் இருந்தது எப்படி?

கலைப்பொருட்கள் இருந்தது எப்படி?

கலைப்பொருட்கள் இன்னும் பாதுகாப்பாக எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மூழ்கிய கப்பல்கள் இஸ்ரேசல் கடற்கரையில் ஏராளமாக இருப்பதாகவும், இங்குள்ள கடல் மற்ற இடங்களைக் காட்டிலும் ஆழழ் அதிகம் என்றும், அதன் அடிப்பகுதியில் உள்ள மணல் கலைப்பொருட்களைப் பாதுகாப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.