சஹாரன்பூர்,:உத்தர பிரதேசத்தில், பள்ளி ஆசிரியர், மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ரசுல்பூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் வீரேந்திரா, ௪௦. இவருக்கும், அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்த மாணவிக்கும் காதல் இருந்துள்ளது. இந்நிலையில், இவர்கள் இருவரும் செப்., ௩ம் தேதி முதல் காணவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர், தங்கள் மகள் கடத்தப்பட்டதாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து, மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, அந்த ஊரின் வனப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. உடனே, போலீசார் அங்கு சென்ற போது ஆசிரியரும், மாணவியும் மரத்தில் துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்ததை பார்த்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சஹாரன்பூர்,:உத்தர பிரதேசத்தில், பள்ளி ஆசிரியர், மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்