மும்பை :மஹாராஷ்டிராவின் நவசேவா துறைமுகத்தில் 1,725 கோடி ரூபாய் மதிப்புள்ள, ‘ஹெராயின்’ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையிலிருக்கும் துறைமுகம் வழியாக மிகப்பெரும் அளவில் ஹெராயின் கடத்தப்படுவதாக புதுடில்லி வருவாய் புலனாய்வு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் புதுடில்லி போலீசாருடன் மும்பை நவசேவா துறைமுகத்துக்கு விரைந்தனர்.அங்கிருந்த கன்டெய்னர்களில் தீவிர சோதனை நடத்தினர்.
இதில் இறக்குமதி செய்யப்பட்ட மூலிகை பொருட்களில் மறைத்து, ஹெராயின் கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றில் இருந்து 345 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கன்டெய்னரை புதுடில்லி சிறப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. கடத்தல்காரர்கள் பற்றிய விபரம் விரைவில் வெளியிடப்படும் என புதுடில்லி போலீசார் கூறியுள்ளனர்.கடந்த ஆண்டு செப்டம்பரில் குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் வருவாய் புலனாய்வுத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 3,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement