வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ரியாத்: முதல்முறையாக விண்வெளி திட்டத்தை துவக்கி பெண் வீராங்கனையை அனுப்ப சவுதி அரேபிய அரசு அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியா நாட்டில் பெண்கள் வாகனங்கள் ஓட்ட அனுமதியில்லாமல் இருந்தது. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. அந்நாட்டில் பெண் ஆர்வலர்களும், கார் ஓட்ட அனுமதி வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தினர். இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு பெண்கள் கார் ஓட்ட சவுதி அரசு அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் விஷன் 2030′ எனும் விண்வெளித் திட்டத்தை சவுதி அரசு முதன் முறையாக துவக்கியுள்ளது. இதற்கான தேசிய விண்வெளி ஆணையத்தை உருவாக்ககியுள்ளது. ‘சவுதி அரேபியாவின் விண்வெளி ஆய்வுத் திட்டம் மனிதகுலத்துக்குச் சிறந்த சேவை செய்ய உதவும் வகையில் விண்வெளிக்கு பயணிக்க சவுதி பெண்ணுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இது சவுதி அரசுக்கு ஒரு வரலாற்று முன்னுதாரணமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement