18 – 65 வயது வரையிலானோர் ரஷ்யாவை விட்டு வெளியேற தடை?

மாஸ்கோ:’ரஷ்யாவில், 18 – 65 வயது வரை உள்ளவர்கள் விமானம் மற்றும் ரயில்களில் நாட்டைவிட்டு வெளியேற பயணச்சீட்டு அளிக்கக் கூடாது’ என, அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த பிப்., 25ல் போர் தொடுத்தது. தற்போது, போர் ஏழு மாதங்களை எட்டியுள்ள நிலையிலும், அது நீடித்து வருகிறது.

இதற்கிடையே ரஷ்யப் படைகளுக்கு எதிராக, உக்ரைன் ராணுவம் கடும் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்நிலையில் போரை தீவிரப்படுத்தும் வகையில், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள நான்கு பிராந்தியங்களை, தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ரஷ்யா திட்டமிட்டு உள்ளது. டோனெட்ஸ்க், லுஹான்க்ஸ், கெர்சான் மற்றும் ஜபோரிஸ்சியா ஆகிய நான்கு பிராந்தியங்களை தங்களுடன் இணைக்க ரஷ்யா திட்டமிட்டு உள்ளது. இந்நிலையில், ‘டிவி’ வாயிலாக ரஷ்ய மக்களிடையே அதிபர் விளாடிமிர் புடின் நேற்று முன்தினம் ஆற்றிய உரையில், ‘ரஷ்ய ராணுவத்தில் மூன்று லட்சம் வீரர்கள் இருப்பில் வைக்கப்படுவர்’ என, தெரிவித்தார்.இந்த அறிவிப்பை அடுத்து, ரஷ்யாவின் அண்டை நாடுகளான ஆர்மேனியா, ஜார்ஜியா, அசர்பைஜான், கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் விமானங்கள், அடுத்த சில நாட்களுக்கு முழுதுமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைவரும் கட்டாய ராணுவ சேவையில் ஈடுபடும் சட்டத்தை ரஷ்ய அரசு அமல்படுத்தக் கூடும் என்பதால், மக்கள் நாட்டை விட்டு வெளியேற துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், ராணுவத்தில் பணியாற்ற தகுதியுடைய 18 – 65 வயது வரையிலான ரஷ்யர்கள் நாட்டைவிட்டு வெளியேற, விமானம் மற்றும் ரயில்களில் பயணச்சீட்டு வழங்கக் கூடாது என ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியானது. ராணுவத்தின் முறையான அனுமதி உள்ளவர்கள் மட்டுமே நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.