சந்தையில் காணப்படும் திரிபோஷா போன்ற பொருட்களில் எப்லொடொக்ஸீன் கலந்துள்ளதாகத் தெரிவித்து தொடரப்பட்ட பல வழக்குகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க, அந்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து விநியோகிக்கும் 04 பிரதான நிறுவனங்கள் மற்றும் அதன் பணிப்பாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நேற்று (21) உத்தரவிட்டுள்ளார்.
கொத்தொடுவ பொது சுகாதார பரிசோதகர் அலுவலகத்தின், பொது சுகாதார பரிசோதகர் சஜித கசுனால் தாக்கல் செய்யப்பட்ட 04 வழக்குகளை பரிசீலித்த நீதவான்,,சம்பந்தப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து விநியோகம் செய்யும் நிறுவனங்களின் பணிப்பாளர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.
அளவுக்கு அதிகமான எப்லொடொக்ஸீன் அடங்கிய திரிபோஷா போன்ற உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வது தொடர்பாக 1993 ஆம் ஆண்டின் உணவுப் பொருள் , 787 பல்வேறு கட்டளைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரனையைத் தொடர்ந்து குறித்த வழக்கு கொத்தொடுவ பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகத்தின் ஊடாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது..