புதுடில்லி, :உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் வழக்குகள், செப்., 27 முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. உச்ச நீதிமன்றம் 2018ல் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்தபோது, ‘வழக்குகளின் விசாரணை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தலைமை நீதிபதி பணியிலிருந்து ஓய்வு பெற்ற என்.வி.ரமணா, தன் கடைசி பணி நாளில் முக்கியமான சில வழக்குகளை இணையதளம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்தார். இதன் தொடர்ச்சியாக சமீபத்தில், புதிய தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கூட்டம் புதுடில்லியில் நடந்தது. இதில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் வழக்குகளை, செப்., 27 முதல் ‘யு டியூப்’ சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்வது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
புதுடில்லி, :உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் வழக்குகள், செப்., 27 முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. உச்ச நீதிமன்றம் 2018ல் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்தபோது,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்