தங்கம் (gold price) விலையானது சர்வதேச சந்தையில் இன்றும் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சற்று சரிவில் தான் காணப்படுகின்றது. இந்திய சந்தையிலும் சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. இது இன்னும் குறையுமா? குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பா? நிபுணர்களின் கணிப்பு?
தங்கத்தில் தொடர்ந்து செல் ஆஃப் டிரெண்டிங்கே உள்ள நிலையில், தொடர்ந்து சரிவினைக் காணலாமோ என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது.
இதற்கிடையில் தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
டிசிஎஸ்: வாரம் 3 நாள் கட்டாயம் ஆபீஸ்.. புதிய உத்தரவு..!
தேவை அதிகரிக்கலாம்
பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் தங்கத்தின் தேவையானது முதலீட்டு ரீதியாக அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இந்தியாவில் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில், பிசிகல் தங்கத்திற்கான தேவையானது அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த விலையில் வாங்கலாம்
அத்தோடு தங்கம் விலையனது தற்போது ஆறு மாத சரிவு விலையில் காணப்படும் நிலையில், இது குறைந்த விலையில் வாங்க சரியாக வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. ஆக இது மீடியம் டெர்மில் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மத்திய வங்கியானது 75 அடிப்படை புள்ளிக்ள் வட்டியினை அதிகரித்துள்ள நிலையில் இது மேற்கொண்டு அதிகரிக்கலாமென என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.
எவ்வளவு தேவை?
கடந்த அட்சய திருதியை சமயத்தில் தங்கத்தின் விற்பனையானது 20% அதிகரித்த நிலையில், வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் அதே அளவுக்கு விறபனையானது அதிகரிக்கலாம் என எதிர்பர்க்கப்படுகிறது. இதற்கிடையில் தங்கம் விலையும் வாங்குவதற்கு ஏதுவாக சரிவில் காணப்படுகின்றது. கடந்த வியாழக்கிழமையன்று 10 கிராமுக்கு 45,800 ரூபாயாக இருந்த ஆபரணத் தங்கம் விலை, இன்று 46000 ரூபாயினை தாண்டியுள்ளது.
ரூபாய் சரிவு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியினை கண்டுள்ளது. இது மேற்கொண்டு வீழ்ச்சியினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டியில்லா முதலீடு?
அமெரிக்காவில் தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில், இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீட்டினை குறைத்துள்ளது. இது மேற்கொண்டு தங்கத்தில் முதலீடுகள் குறைய வழிவகுக்கலாம். இதனால் தங்கம் விலையில் பெரியளவில் முதலீடுகளை செய்ய வழிவகுக்காது. எனினும் டாலர் மதிப்பு, பத்திர சந்தையில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள் தங்கம் விலையில் பிரதிபலிக்கலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை?
சர்வதேச சந்தையில் தங்கம் விலை 2.65 டாலர்கள் குறைந்து, அவுன்ஸுக்கு 1678.35 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையும், இன்று தொடக்க விலையும் ஒன்றாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையையும் உடைக்கவில்லை. ஆக தங்கம் விலையானது மேற்கொண்டு மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை?
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை சற்று அதிகரித்து, 19.617 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையையும் உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும் மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 132 ரூபாய் குறைந்து, 49,872 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலை மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், மீண்டும் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் எனலாம்.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையிலும் வெள்ளி விலை பெரியளவில் மாற்றம் காணாத நிலையில், இந்திய சந்தையில் தற்போது கிலோவுக்கு 126 ரூபாய் குறைந்து, 57,897 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையையும் உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு, 15 ரூபாய் அதிகரித்து, 4690 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து, 37,520 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 16 ரூபாய் அதிகரித்து, 5116 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 128 ரூபாய் அதிகரித்து, 40,928 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 51,160 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலை சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 20 பைசா அதிகரித்து, 63.20 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 632 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 63,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று – ரூ.46,900
மும்பை – ரூ.46,500
டெல்லி – ரூ.46,650
பெங்களூர் – ரூ.46,550
கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.46,900
gold price on 23rd September 2022: gold demand may increase in festival season
gold price on 23rd September 2022: gold demand may increase in festival season/தங்கம் வாங்க ரெடியா.. இன்று விலை எப்படியிருக்கு.. இனி எப்படியிருக்கும்?