சமீபத்தில் 2022-கான IIFL Wealth Hurun இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் 336வது இடத்தை இந்திய வம்சாவளியான நேஹா நர்கெடே இடம் பெற்றுள்ளார். இந்திய-அமெரிக்கரான நேஹா, 2018ல் ஃபோர்ப்ஸின் இதழில் வெளியிட்ட உலகின் தொழில்நுட்பத்தின் சிறந்த 50 பெண்கள் பட்டியலிலும் இடப்பெற்றிருந்தார். மேலும் அமெரிக்காவில் சிறந்த தொழில்முனைவோர் பட்டியலில் 57வது இடத்தில் உள்ளார்.
37 வயதாகும் நேஹா, புனேவில் பிறந்தவர் ஆவார். புனே இன்ஸ்டிடியூட் ஆப் கம்ப்யூட்டர் டெக்னாலஜி (PICT), புனே பல்கலைக்கழகம் மற்றும் ஜார்ஜியா டெக்கில் கல்வி பயின்றுள்ளார். தற்போது ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் 336வது இடத்தைப் பிடித்துள்ள நர்கெடே, மதிப்பிடப்பட்ட சொத்து மதிப்பு ₹4,700 கோடி.
தொழில்முனைவோர், முதலீட்டாளர் மற்றும் ஆலோசகராக பணியாற்றி இயங்கி வரும் நேஹா முன்னதாக ஓரகிள் மற்றும் லிங்க்ட்இன் நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். பிறகு அங்கிருந்து வெளியேறி, அப்பாச்சி காஃப்காவின் மற்றும் CTO நிறுவனத்தின் இணை நிறுவனரானார். இளம் வயது இந்திய வம்சாவளி பெண்ணான நேஹா நர்கெட்டே ஊழியராக பணிபுரிந்து தற்போது பணக்காரர்கள் பட்டியலில் நுழைத்திருப்பதற்குப் பாராட்டு குவிந்து வருகிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
