ஐடி துறையில் 100ல் ஒருவர் இப்படி தான்.. விப்ரோ, டிசிஎஸ், இன்போசிஸ்-க்கு அதிர்ச்சி தகவல்..!

ஐடி மற்றும் டெக் ஊழியர்கள் மத்தியில் தற்போது ஹாட் டாப்பிக் இருப்பது மூன்லைட்டிங் தான், அதிலும் குறிப்பாக விப்ரோ நிறுவனம் 300 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப் பின்பு இது குறித்த அச்சம் ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்தியாவின் டாப் 4 ஐடி நிறுவனங்களான விப்ரோ, டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் ஆகியவற்றில் மட்டும் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான ஐடி ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், முனஅனணிஎ வேலைவாய்ப்பு சேவை தளத்தின் ரிப்போர்ட் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது.

எல்லாத்துக்கும் காரணம் இந்தக் கொரோனா லாக்டவுன் தானாம்..!!

டிசிஎஸ்: வாரம் 3 நாள் கட்டாயம் ஆபீஸ்.. புதிய உத்தரவு..!

 மூன்லைட்டிங்

மூன்லைட்டிங்

மூன்லைட்டிங் பற்றி விளக்க தேவையில்லாத அளவுக்குத் தற்போது இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளது, இந்த நிலையில் இந்தியாவில் பல முன்னணி வேலைவாய்ப்பு தேடல் தளத்தில் இருக்கும் உயர் அதிகாரிகள் முக்கியமான ஒரு தகவலைத் தெரிவித்துள்ளனர்.

100 பேரில் ஒருவர்

100 பேரில் ஒருவர்

இந்திய ஐடி துறையில் பணியாற்றும் ஐடி ஊழியர்கள் மத்தியில் 100 பேரில் ஒருவர், ஒரு நிறுவனத்தில் முழுநேர ஊழியராக இருந்துகொண்டு மற்றொரு நிறுவனத்தில் கூடுதலான வருமானத்திற்காகவும், அனுபவத்திற்காகவும் பணியாற்றி வருகின்றனர் எனக் கூறுகின்றனர் வேலைவாய்ப்பு தேடல் தளத்தில் இருக்கும் உயர் அதிகாரிகள்.

லாக்டவுன்
 

லாக்டவுன்

குறிப்பாகக் கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் காலத்தில் தான் ஐடி மற்றும் டெக் ஊழியர்கள் அதிகளவில் 2வது வேலைவாய்ப்புகளைத் தேர்வு செய்யத் துவங்கியுள்ளனர் என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே தற்போது ஐடி நிறுவனங்கள் அவசர அவசரமாக ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வருகிறது.

 விப்ரோ, டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல்

விப்ரோ, டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல்

இந்தியாவின் டாப் 4 ஐடி நிறுவனங்களான விப்ரோ, டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் ஆகியவை மூன்லைட்டிங் எதிராக நிற்கிறது. இதுமட்டும் அல்லாமல் அனைத்து ஊழியர்களுக்கும் இதன் சீரியஸ்-ஐ உணர்த்தும் வகையில் பல அறிவிப்புகளை வெளியிட்டு உள்ள வேளையில் விப்ரோ 300 ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கியுள்ளது.

டெக் மஹிந்திரா

டெக் மஹிந்திரா

இதேவேளையில் டெக் மஹிந்திராவின் சிபி குருநானி மூன்லைட்டிங் ஆதரவாகவும், ஊழியர்கள் 2வது வேலைவாய்ப்பைத் தேர்வு செய்வதில் எவ்விதமான தவறும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் CIEL HR நிறுவனம் சுமார் 5 சதவீத ஐடி ஊழியர்கள் ஏதேனும் ஒரு சைட் பிஸ்னஸ் அல்லது வருமானம் ஈட்டும் வழியை வைத்துள்ளதாகக் கூறுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

IT employees: more than 1 percent techies have side hustle; TCS, infosys, wipro, HCL in trouble

IT employees: more than 1 percent techies have side hustle; TCS, infosys, wipro, HCL in trouble

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.